உயிர் இருக்கும் எக்காலத்திலும் கட்சியை விட்டு மாறமாட்டேன்
நானும் சேர்ந்து உரமிட்டு வளர்த்த மரத்தை ஊரவர் வெட்டி வீச இடமளிக்க என்னால் முடியாது.
அதன் ஒவ்வொரு வேர்களும் என் பெயரைச் சொல்லும். கிளைகள் கூட என்னை அரவணைக்கும் ஆனால் நான் நீதிமன்றத்தில் கொன்று நிறுத்த இக்கட்சியை விட்டு விலக வில்லை....
அதன் நிழலிலேயே மரணிக்க விரும்புகிறேன்...
எனக்கு பதவிகளின் மேல் ஆசையில்லை. ஆனால் பதவிகளுக்காகத்தான் கட்சியுமல்ல என்பதனை அனைவரும் புரியவும் வேண்டும்.
பதவியும் அந்தஸ்தும் மட்டும் எடுத்து சொகுஷாக வாழ கட்சி தேவையல்ல ஆனால் கறிவேப்பிலையாக கட்சியைப் பயன்படுத்த கனவும் காணவேண்டாம். இது பெரும்தலைவர் சமூகத்திற்கெதிரான அடக்கு முறையை ஒடுக்குவதற்காக ஆரம்பித்த கட்சியை கூஜாத்தூக்க பயன்படுத்த முடியாது...
நம்மவர்களை நின்மதியாய் வாழவைக்க நம்மை நாம் காத்திடுவோம்.
