கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடல்..!

எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாணத்தில் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் நிகழ்வொன்று நேற்று (09.10.2016) மட்டக்களப்பு சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ அல்ஹாபிழ் நசீர் அஹ்மட், கௌரவ கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ. நஸீர் கல்வி அமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் பாரிய பிரச்சினையாகவுள்ள ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவும் அத்தகைய ஆசிரியர் வள பற்றாக்குறையுள்ள பாடசாலைகளுக்கு ஏனைய பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களை விகிதாசார அடிப்படையில் பங்கீடு செய்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். 

மேலும் கிழக்கு மாகாணத்தில் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்துதல் மற்றும் அதற்கு தடையாகவுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -