சிறுநீரக நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர்களின் சர்வதேச அமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுநீரக நோய் தடுப்புக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றும் பெரும் பணியைப் பாராட்டி சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சர்வதேச அமைப்பு ஜனாதிபதி அவர்களுக்கு விசேட விருது வழங்கி கௌரவித்துள்ளது.
நேற்று (19) பிற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது சிறுநீரக நோய் நிபுணத்துவ மருத்துவர்களின் சர்வதேச அமைப்பின் தலைவி பேராசிரியர் Adeera Levin அம்மையாரால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையின் சிறுநீரக நோய்த்தடுப்புக்காக சர்வதேச ரீதியில் நல்கிவரும் பங்களிப்பை பாராட்டி பேராசிரியர் Adeera Levin அம்மையாருக்கும் சிறுநீரக நோய்தடுப்புக்காக மேற்கொண்டுவரும் பங்களிப்பைப்பை பாராட்டி விசேட வைத்திய நிபுணர் திலக் அபேசேக்கர,வைத்தியர் ஜோர்ஜ் ஏப்ரஹம்,சிறுநீரக நோய்த் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல ஆகியோருக்கும் ஜனாதிபதி அவர்களினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.