வசீம் தாஜுடீன் கொலை விவகாரம்: புதிய தகவல் அம்பலம்

ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று இரவு அவரது வாகனத்தின் பின்னால் பயணித்த மற்றும் ஒரு வாகனம் தொடர்பில் தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குற்ற விசாரணை திணைக்களத்தினால் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

தாஜுடீன் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதிக்கு பதிலாக ஆஜராகிய பிரதி சொலிஸ்டர் ஜெனரால் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

அந்த கொலை இடம்பெற்ற தினத்தன்று ஜனாதிபதி செயலகத்திலும், ஜனாதிபதி இல்லத்திலும் இருந்து பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தொலைப்பேசி அழைப்பு தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு இதன் போது உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குற்றம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாராஹென்பிட்டி பொலிஸ் குற்ற பிரிவின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -