அகமட் எஸ்.முகைடீன், ஹாசீப் யாசீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரின் முயற்சியினால் ஒலுவில் துறைமுக படகுப்பாதையில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றும் வேலைத்திட்டம் (20) செவ்வாய்க்கிழமைஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா,கே.எம். தௌபீக், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு மீனவர் சங்க தலைவர் எம்.எஸ்.ஏ. நசீர்உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஒலுவில் துறைமுக படகுப் பாதையில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றும் வேலைத்திட்டம் இலங்கைமீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 'ரெஜர் சயுறு' கப்பல் மூலம்மேற்கொள்ளப்படுகிறது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் இணைந்து கடற்றொழில் நீரியல் வளங்கள்அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்தவேலைத்திட்டத்திற்காக 4 கோடி ரூபா நிதி கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மண்ணை அகற்றும் 'ரெஜர் சயுறு' கப்பலானது ஒரு தடவையில் 300 மீற்றர் கியூப் மண்ணைஅகற்றி கடலின் நடுப்பகுதியில் கொட்டுகிறது. இதனால் ஒரிரு தினங்களில் படகுப் பாதையின் ஊடாகமீன்பிடிப் படகுகள் செல்லக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலுவில் துறைமுக படகுப் பாதையில் மண் நிரம்பியுள்ளதனால் பல்லாயிரக் கணக்கான மீனவர்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் மீனவர்களின் குறித்த பிரச்சினைக்கு துரித நடவடிக்கை எடுத்தவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் அமைச்சர் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கு தமதுநன்றிகளையும் தெரிவித்தனர்.


