க.கிஷாந்தன்-
நமது நாட்டில் சகல வளங்களும் இருந்தாலும், வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல வருமானம் இல்லை. இதனால் மத்தியகிழக்கு நாடுகளை நோக்கி வீட்டு பணிப்பெண்களாக வேலைத்தேடி செல்கின்றோம் என மஸ்கெலியா கிலன்டில் தோட்ட பெண்மணி கணேஷன் புஸ்பலீலா தெரிவிக்கின்றார்.
2014.08.20ம் திகதி தனது வீட்டிலிருந்து சவூதி ரியாத் மாநிலத்திற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற இவர் அவ் வீட்டின் முதலாளி ஏமாற்றியதன் காரணமாக 2 வருடங்களின் பின் உழைத்தமைக்கு ஊதியம் கிடையாது வெறுங்கையுடன் கடந்த 8.12.2016 அன்று நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
இவர் முதல்முறையாக வெளிநாட்டு வேலைக்கென மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் தரகர் ஊடாக 2 இலட்சம் ரூபாய் தருவதாக கூறி வெறும் 35,000 ரூபாய் பணத்தை மாத்திரம் வழங்கிவிட்டு இவரை கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டதாக அப்பெண்மணி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தனக்கு வழங்க வேண்டிய மிகுதி தொகையை கேட்டுச் சென்ற இப்பெண்ணின் கணவரை கொழும்பில் தாக்கி இரண்டு நாட்கள் பொலிஸ் நிலையத்திலும் வைத்துள்ளனர். இதற்கான காரணம் இவரை தாக்கும் பொழுது முகவர் நிலையத்தின் சேவையாளர் ஒருவரை தான் திரும்பி தாக்கியதால் ஏற்பட்ட நட்டத்திற்கு எனது உழைப்பின் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும், இவரை ஏமாற்றியுள்ளனர்.
இதனால் வருத்தமடைந்த பெண்ணின் கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் நெஞ்சு வலியினால் உயிரிழந்துள்ளார். இவ்விடயத்தை கூட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் மூலம் அந்நாட்டுக்கு அறிவித்தும் வேலை செய்த வீட்டு உரிமையாளர் தனக்கு தெரிவிக்கவில்லை என கவலையுடன் தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த 08.12.2016 அன்று விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த போது தான் உறவினர்களால் எனது கணவர் இறந்த செய்தியை கேள்வியுற்றேன் எனவும் தெரிவித்தார்.

பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை சுபீட்சமடைய செய்யவும் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் வெளிநாடு சென்ற எனக்கு இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களுமாக கொடுக்க வேண்டிய அந்நாட்டு நாணயத்தின் படி 24,300 ரூபாய் வழங்கப்பட வேண்டும். அதாவது ஒரு மாதத்திற்கு அந்நாட்டு நாணயத்தின் படி 900 ரியால் வழங்கப்பட வேண்டும். னது இத்தொகையை அந்நாட்டு உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் செலுத்துவதாக வீட்டுக்காரர் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் எனது பணம் வந்து சேரவில்லை என புஸ்பலீலா கவலை தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையில் இருந்து செல்லும் பெண்கள் தொழிலுக்கு அமர்த்தப்பட்டு அந்நாட்டு வீட்டார்களின் ஊடாக வன்முறைப்படுத்தப்பட்டால் வீட்டிலிருந்து தப்பித்துக் கொள்ளாமல் 2 வருடங்கள் ஒப்பனைக்கேற்ப பொருத்திருந்து 2 வருடங்களின் பின் நாட்டுக்கு வருவது நன்மையை தரும் என அவர் ஏனைய பெண்களுக்கு புத்தி தெரிவித்தார்.
அத்தோடு என்னுடைய தகவல் இலங்கைக்கு தெரியாத பட்சத்தில் எனது உறவினர் ஒருவர் கொழும்பில் விமானி ஒருவரின் வீட்டில் வேலை செய்து வந்த நிலையில் இது குறித்து அறிவித்ததாகவும் அவரின் முயற்சியினால் ரியாத் நாட்டில் உள்ள பொலிஸாருக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸார் தான் வேலை செய்த வீட்டுக்கு வந்த என்னை அழைத்து இலங்கைக்கு அனுப்பி வைத்தனர் என சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஒன்றரை வருட காலமாக எனது தகவல் தொடர்பாக கோரிக்கைகளும் கடிதங்களும் வழங்கப்பட்ட போதிலம் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் தான் உழைத்த பணத்தை உரிய அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பிலான அமைச்சு பெற்றுக்கொடுக்கம் பட்சத்தில் கணவரை இழந்த நான் மூன்று பிள்ளைகளின் கல்வியை முன்னெடுத்து செல்லவும் குடும்ப வறுமை சுமையில் இருந்து மேலோங்கவும் வாய்ப்பாக அமையும் என ஊடாகங்களுக்கு தெரிவித்தார்.