ஆசிரியர் நியமனம் மற்றும் குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலையம் - அன்வர் MPC அவசர பிரேரணை

கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு 11.11.2016 (வெள்ளிக்கிழமை) சபை தவிசாளர் கலப்பதி தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

அமர்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான, ஆர்.எம்.அன்வரால் அண்மையில் கல்வியல் கல்லூரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் கிழக்கு மாகாண பாடசாலைக்கு நியமிக்கப்பட்டது தொடர்பாக தனக்கு திருப்தி இல்லை என்பதுடன் முறையற்ற இடமாற்றம் திருகோணமலை மாவட்டத்திலிருந்து அம்பாறை ,மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களுக்கு இடம்மாற்றம் பெறுவது தொடர்பாக திருகோணமலை மாவட்ட மாணவர்களின் கல்வியினை கல்வி அமைச்சர் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் அது மட்டுமன்றி வழங்கப்பட்ட நியமனம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது பற்றி மாவட்டம் வலையம் மற்றும் இன விகிதாசாரம் என்பன அமைச்சரால் தெரிவிக்கப்பட வேண்டும்.

குறித்த கல்வியல் கல்லூரி ஆசிரியர்களின் பாடசாலை நியமனங்களின் போது மாகாண சபை உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்படவில்லை என்பதுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மாகாண சபை உறுப்பினர்களை கூட்டி இற்றைவரைக்கும் ஒரு ஆலோசனை கூட்டமேனும் கூட்டாமைக்கு காரணம் என்ன அமைச்சர் தனியாக இயங்குவது தொடர்பில் நாம் எதிர்வரும் கிழக்கு மாகாண சபையின் 2017 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன் மொழிவின் போது மட்டும் நாம் தேவை உடையவர்களாக ஆகிவிட முடியாது.

அமைச்சர் இவ்வாறு செய்வதால் வரவு செலவு திட்டத்தில் வாக்களிப்பதா என்பது தொடர்பில் அணைத்து மாகாண சபை உறுப்பினர்களும் சிந்திக்கவேண்டி வரும் எனவும் பல தடவைகள் கல்வி அமைச்சருக்கு குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டுமாறு கேட்டும் கேட்காததுபோல் இயங்குவது பொருத்தமற்றது எனவும்.

மேலும் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் சில பாடசாலைகள் முற்றாக உள்வாங்காத நிலையில் சில வெளி மாகாண பாடசாலைகளில் கடைமையை பொறுப்பேற்ற ஆசிரியர்களை நியமித்திருப்பது எந்த விதத்தில் நியாமானது திருகோணமலை,கிண்ணியா,மூதூர் மற்றும் கந்தளாய் போன்ற வலையங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் குறிப்பாக குச்சவெளி பிரதேச பாடசாலைகளுக்கு மிகவும் குறைவான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவேதான் அமைச்சரிடம் ஏற்கனவே குச்சவெளி பிரதேசத்திற்கு ஒரு தனியான கல்வி வலையம் அமைக்க கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் அவசர பிரேரணை முன் வைத்து பேசியாயது மாத்திரமன்றி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் அவர்களால் குச்சவெளிக்கான தனியான கல்வி வலையம் அமைக்கக்கோரி அமைச்சரவை பத்திரம் போட்டப்பட்டும் அவற்றை நடைமுறை படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் அவ்வாறு தனியான கல்வி வலையம் பெறுவதனூடாக குறித்த பிரதேசத்திற்கான கல்வி நடவடிக்கைகள் சிறந்த நிருவாகத்தினூடாக ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்து பிரதேச கல்வியினை முன்னேற்ற முடியும்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர்களை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இடமாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடாது அவ்வாறு வழங்குவதால் திருகோணமலை மாவட்ட மாணவர்களின் கல்வி சீரழிகின்ற செயல்பாட்டை செய்யக்கூடாது எனவும் அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். 

பின்னர் மாகாண சபை உறுப்பினர் மேதாந்த சில்வா அவர்களால் அம்பாறை சிங்கள பிரதேச பாடசாலைக்கான தனியா கல்வி வலையம் பிரித்து தரப்படவேண்டும் என பிரேரணை முன் வைத்து பேசியபோது அவரது பிரேரணையை ஆதரித்து பேசிய மாகாண சபை உறுப்பினர் அன்வர் குறித்த குச்சவெளி கல்வி வலையத்திற்கான நியாயங்களை மீண்டும் பிரேரணை முன் வைப்பின்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சரால் குச்சவெளி கல்வி வலையம் தொடர்பாக பரிசீலனை மேற்கொண்டு அவற்றுக்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -