மூதூர் மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் வாழும் மீனவர்களின் பல வருடகால பிரச்சினையாக காணப்பட்ட வெளிச்ச வீட்டின் நிர்மாணப்பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபின் முயற்சியால் ஆராம்பிக்கப்படவுள்ளது.
இப்பகுதியில் வெளிச்ச வீடொன்று இல்லாததால் இப்பகுதி மீனவர்கள் திசைமாறி சர்வதேச கடல் எல்லைகளுக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் திசைமாறி பயணிக்கும் அபாய நிலையே காணப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீரவின் கவனத்துக்கு கொண்டுவந்து அவரின் வழிகாட்டலில் அண்மையில் நடைபெற்ற மூதூர் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் இதற்கான அனுமதி பெறப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைய வெளிச்ச வீடு அமைப்பதற்கான இடம் மூதூர் தக்வா நகரில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் மூதூர் பிரதேச செயலாளர் யூசுப் ஆகியோரால் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டது.
இதுதொடர்பாக மீனவர்களை தெளிவூட்டும் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றதுடன் இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் யூசுப், திட்டமிடல் அதிகாரி ரியாஸ், காணி அதிகாரி இர்ஷாத் ,காணி திட்டமிடல் அதிகாரி உனைஸ் ,மீன்பிடி பரிசோதகர் சமந்த உட்பட மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.