காரைதீவு நிருபர் சகா-
கொழும்பு மொறட்டுவ பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்ட காரைதீவு குடும்பஸ்தரின் தலையில் பாரிய காயமுள்ளதாகவும் கழுத்துநெரிக்கப்பட்டிருக்கலாமென வைத்தியர்கள் கூறியதாக காலஞ்சென்றவரது சகோதரன் வேலுப்பிள்ளை நமசிவாயம் தெரிவித்தார்.
இது பெரும்பாலும் கொலையாகவிருக்கலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைசெய்யப்பட்ட மொறட்டு பல்கலைக்கழகத்தில் ஜசிசி கம்பனியில் தச்சுத்தொழிலாளியாகப்பணியாற்றிய காரைதீவைச் சேர்ந்த வேலுப்பிள்ளை விவேகானந்தன் (வயது 48) என்பவரது பிரேத பரிசோதனை நேற்று செவ்வாய்கிழமை பாணந்துறை வைத்தியசாலையில் நடைபெற்றது.
காலஞ்சென்றவரது மனைவி சகோரதர்கள் உறவினர்கள் நேற்று காலை மொறட்டுவ பொலிசிடம்சென்று பின்னர் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
சட்டவைத்தியஅதிகாரியும் வந்துபார்வையிட்டார்.பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கையளிக்கப்படவில்லை. காலின் தொடைப்பகுதியிலும் காயமுள்ளது. விசாரணைகள் முடிவடைந்தபின்னர் நேற்று மாலையளவில் பிரேதம் உறவினரிடம் கையளிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை மொறட்டுவப்பொலிசார் இக்கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் இவருடன் கூடவிருந்து பணியாற்றிய சக தொழிலாளி ஒருவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. இவர் கொலைசெய்யப்பட்ட விவேகானந்தனின் அறையில் கூட இருந்தவரெனக்கூறப்படுகின்றது. இவர் பெரும்பான்மையினத்தவராவார். பணக்கொடுக்கல்வாங்கல் தகராற்றிலே இக்கொலை இடம்பெற்றிருக்கலாமெனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.