தமிழ் பேசும் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுவரும் நேத்ராவின் “வெளிச்சம்” நேரடி நிகழ்ச்சி

எம்.ரீ.எம்.பாரிஸ்-

வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.00க்கு தேசிய தொலைகாட்சியின் (ரூபவாஹினி) நேந்ரா டிவியில் ஒளிபரப்பாகும் நேரடி “வெளிச்சம்” நிகழ்ச்சிக்கு தமிழ் பேசும் மக்களிடம் அமேக வரவேற்பு கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் ஒன்றியம், சிவில் சமூக அமைப்புக்கள்,இளைஞர் கழகங்கள், மதகுருமார்கள், கல்விமான்கள், அரசியல் விமர்சகர்கள் தமது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.

அனல் பறக்கும் அரசியலில் இனக்கத்தை நோக்கிய பயனமாகவும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தொடர்பான விழிப்பூட்டலை வழங்கி வருவதுடன் உயர்தரத்தில் அரசியல் விஞ்ஞான பாடத்திட்டத்தினை கற்கையாக மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சமகால அரசியலை ஊடகங்களின் மூலம் பயில்வதற்கும் ஒரு அரிய வாய்ப்பாக அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் இந்நிகழ்ச்சிக்கு தமிழ் பேசும் மக்களிடம் இருத்து அதித வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் அரச ஊடகங்கள் பக்கசார்பாக இயங்கி வந்த வரலாற்றினை இந்நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள் ஊடக சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டு மிகுந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களை மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலமை காணப்பட்டது.
எமது நாட்டின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் கடந்த அரசாங்க காலத்தில் பழிவாங்கப்பட்டு பொறுப்பு மிக்க பதவிகளுக்கு பொருத்தமற்ற நபர்கள் நியமிக்கப்பட்டதன் விளைவாக அரச ஊடகங்களின் பொறுப்பு மிக்க பணிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது.

ஆனால் இன்று நல்லாட்சி அரசாங்க காலத்தில் அந்நிலமை மாற்றி அமைக்கப்பட்டு தேசிய ஊடகங்களின் பணி சிறப்பாக இடம் பெற்று வருவதாக சிவில் சமூக அமைப்புக்கள் சுட்டி காட்டியுள்ளன இது இலங்கை வரலாற்றில் உன்னதமான நல்ல மாற்றத்திற்கான உதாரணமாகும்.
தனியார் தமிழ் ஊடகங்களை காட்டிலும் தேசிய தொலைகாட்சி அரச ஊடகங்கள் தற்போது மிகச்சிறப்பாக செயற்பட்டு வருகின்றன விஷேடமாக (ரூபவாஹினி) நேந்ரா டிவியில் ஒளிபரப்பாகும் பிரதான 7.00 மணி செய்தி ஏனைய தொலைகாட்சிகளை முந்திக்கொண்டு இந்நாட்டு மக்களுக்கு பொறுப்பு மிக்க தகவல்களை வழங்குவதில் உண்மையின் அடையாளமாக பிரதிபலிக்கின்றது.

இதற்கு மேலாக தேசிய தொலைகாட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் தரமிக்கதாகும்.


விஷேடமாக வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.00க்கு தேசிய தொலைகாட்சியின் (ரூபவாஹினி) நேந்ரா டிவியில் ஒளிபரப்பாகும் வெளிச்சம் நிகழ்ச்சியானது போலி அரசியல்வாதிகளின் முகத்திரைகளை கிழித்து எரித்து உண்மையின் அடையாளமாக நேருக்கு நேர் முரண்பாட்டு எண்னங்களையும் கருத்துக்களையுடைய அரசியல் வாதிகளிடம் இனக்கத்தை ஏற்படுத்தி மக்கள் நலன் காத்து நல்லாட்சி மற்றும் மக்களுக்கான சேவையின்பால் வழிகாட்டும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகின்றது.

இதற்காக வேண்டி தேசிய தொலைகாட்சியின் தமிழ் செய்திப்பிரிவுக்கும் “வெளிச்சம்” நிகழ்ச்சியினை சிறப்பாக நடாத்தி வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் யு.எல்.யாகூப் அவர்களுக்கும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பில் ஈடுபடும் குழுவினருக்கும் இலங்கை ஒளிபரப்பு கூட்டு தாபனத்திற்கும் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் ஒன்றியம், சிவில் சமூக அமைப்புக்கள்,இளைஞர் கழகங்கள், மதகுருமார்கள், தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -