மூதூர் அரபா முஸ்லீம் வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்குமேல் சித்தி அடைந்த மாணவர்களை கெளரவித்து பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு 12.11.2016 பி.ப.3.30 மணியளவில் பாடசாலை அதிபர்கள் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு கெளரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,ஜே.எம்.லாஹிர் சிறப்பு விருந்தினர்களாக பிரதி கல்விப்பணிப்பாளர் லாபீர்,மூதூர் வலையா கல்வி பணிமனையின் நிதி உதவியாளர் அரூஸ் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பள்ளிவாசல் தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டு சித்தி அடைந்த மாணவர்களுக்கான பதக்கங்களையும் பரிசில்களையும் வழங்கி கெளரவித்தனர்.