கிழக்கு மகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்வி தொடர்பான விடையங்களில் கிழக்கு மகாண கல்வி அமைச்சின் அதிகாரிளும் அமைச்சும் அசமந்த போக்குடன் செயற்படுவதையும் அமைச்சர்கள் அகெளரவமான முறையில் மக்கள் முன்னிலையில் செயற்படுவதையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு இடம்பெற்ற போது உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஆசிரியர்கள் நியமங்களில் வழங்கப்படுகின்ற தகவல்களின் போது அமைச்சர்களை அகெளரவப்படுத்தும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் அதிகாரிகளின் செயற்பாடுகளை வண்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறன சிறப்புரிமை மீறும் செயற்பாடுகளை செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் இன்று சபையில் கோரினார்.
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பிரச்சினைகள் அதிகம் உள்ள ஒரு வலயமாக அக்கரைப்பற்று, கல்முனை வலயம் உள்ளதாக கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.ரீ. நிசாம் கூறியுள்ளார். ஆனால் கடந்த வாரம் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம் இந்த குறைபாடுகள் பற்றி அமைச்சர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரினால் பதில் அழிக்க முடியாமல் இருந்தது.
நான் சில உதாரணங்களை கூற முடியும் குறிப்பாக அக்கரைப்பற்று வலயத்தில் அட்டாளைச்சேனை கோட்டத்தில் உள்ள அல்முனீறா பெண்கள் பாடசாலையில் 07ஆசிரியர்கள் கனிதம், விஞ்ஞானம் பாடங்களுக்கும் இலலாத நிலையில் கல்முனையச்சேர்ந்த 04 ஆசிரியர்கள் இரண்டு வருட ஒப்பந்தத்தில் சேவையாற்றிய ஆசிரியர்களை விடுவித்துள்ள மாகாணப்பணிப்பாளர் அதற்கான வெற்றிடங்களை இன்னும் நிரப்பவில்லை. இவ்வாறு ஆசிரியர் பற்றாக்குறைகள் காணப்படுகின்ற போதிலும் ஆசிரியர் பற்றாக்குறைகளை இவ்வாறு அதிகரித்து செல்ல இவர்களே காரணமாகின்றார்கள். அவ்வாறு அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் உள்ள ரீ.பி.ஜாயா வித்தியாலத்தில் 136 பிள்ளைகள் இருக்கின்ற பாடசாலைகளில் வெறும் 04 ஆசிரியர்களே கடமையில் இருக்கின்ற போதிலும் இதை எல்லாம் அறிந்த கல்வி அதிகாரிகள் எவ்வாறு ஆசிரியர் பிரச்சினை இல்லை எனக்கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
அது போல் அட்டாளைச்சேனை கோட்டத்தில் உள்ள ஒலுவில், பாலமுனை போன்ற பிரதேசங்களிலும் அக்கரைப்பற்று , கல்முனை வலயத்தில் உள்ள பாடசாலைகளில் , இவ்வாறான பாரிய ஆசிரியர் பிரச்சினைகள் காணப்படுகின்ற போது கல்வியமைச்சு அசமந்த போக்குடன் செயற்படுவதை தவிர்க்க வேண்டும் இவ்வாறான பிழையான தகவல்களை வழங்குவதை கல்வியமைச்சர் கவனிக்க வேண்டும் எனவும் சபையில் கோரினார்.
மாகாணப்பணிப்பாளராக இருந்த இன்றைய கல்வியமைச்சர் தலைமையிலான குழு இவ்வாறு செயற்படுவதை மிகவும் கவலையுடன் நாம் நோக்குகின்றோம் எனபதும் அதிகாரிகள் விடும் பிழையகளினால் கல்வியமைச்சர் மீது கேள்விகள் கேட்கப்படுகின்றது அதை அவர் எதிர்நோக்கவே வேண்டும். அத்துடன் கிழக்கில் உள்ள மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளில் நாம் கவனத்துடன் செயற்பட்டு மாணவர்களின் கல்வியில் நாம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் முழு கிழக்கிலும் காணப்படுகின்றது ஆகவே அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சர் உடனடியாக தீர்க்க வேண்டும்.
இது போல் சம்பரகமுவ மாகாணத்தில் பரீட்சைகள் இல்லாமல் பட்டதாரிகளை உள்வாங்கும் போது ஏன் கிழக்கு மாகாணத்தில் உள்வாங்க முடியாது குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கும் போது இவ்வாறான விடையங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுக்க கிழக்கு மகாண ஆளுநர், முதலமைச்சர், கல்வியமைச்சர் உட்பட அதிகாரிகள் இதனை கவனத்திற்கொண்டு செயற்படவேண்டும் ஆனால் இதுவரை இதனை கவனித்திற்கொள்ளாமல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவது கவலையளிக்கிற்து. குறிப்பாக குறித்த விடையங்களை ஏனைய மாகாணங்கள் செய்கின்ற போது ஏன் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு செய்ய முடியாது எங்களை இந்த கெளரவமான சபைக்கு மக்கள் தெரிவு செய்து அனுப்பியிருக்கின்ற போது இந்த மக்களுக்கு ஏன் இவ்வாறான மிகவும் பிரச்சினைகளுக்குறிய விடயங்களை தீர்க்க முடியாது எனவும் அமைச்சர் ஆவேசமாக கேள்வியெழுப்பி இதற்கான தீர்வினையும் கெளரவ தவிசாளர் இவ்விடத்தில் தர வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அது மாத்திரம் இன்றி கிழக்கு மாகாணத்தில் 05,06வருடங்களாக சேவை செய்த ஆசிரியர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றார்கள். ஆகவே அதிலும் கல்வியமைச்சு கவனத்திற்கொண்டு கல்விப்பிரச்சினைகளுக்கான தீர்வினைப்பெற்றுக்கொடுக்க கல்வியமைச்சு முன்னின்று செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.