முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸின் தலைமையில் இயங்கும் பொதுஜன பெரமுன கட்சியின்உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பெற்றுக்கொண்டார்.
இன்று மாலை அவர், குறித்த கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதாக கட்சியின்பொதுச்செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டமையை அடுத்து ஜீ எல் பீரிஸ்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையை இழந்து விட்டதாக அந்தக் கட்சியின்பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்தவரான பசில் ராஜபக்சவும்பொதுஜன பெரமுனவில் இணைந்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்தக் கட்சியில் இணைவார் என்றுஎதிர்ப்பார்க்கப்படுகிறது.