மக்கள் சுப்பர் மூன் பார்க்க கடைக்கரைக்குப் போனதன் பின்னர் வீட்டுக்கு வந்த திருடன் - கம்பியெண்ணுகிறார்



ஏறாவூர் ஏஎம் றிகாஸ் -

(சுப்பர் மூன்) பிரகாச சந்திரனை பார்ப்பதற்கு மக்கள் கடற்கரைக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு -ஏறாவூர்ப் பிரதேசத்தில் பணம் நகைகளை திருடுவதற்கு முயற்சித்த குழுவொன்றின் பிரதான நபர்கள் இருவரை துப்பாக்கிப்பிரயோகம் செய்து ஏறாவூர்ப் பொலிஸார் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.

15.11.2016 அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றதாக ஏறாவூர்ப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிந்தக்க பீரிஸ் தெரிவித்தார்.

கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த பொலிஸாருக்கு அன்பளிப்புக்களும் ஊர் மக்கள் சார்பில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் றகுமானியா பாடசாலை குறுக்கு வீதியிலுள்ள இரண்டு வீடுகளில் கூரை ஓடுகளைக் கழற்றி திருடர்கள் உள்ளே இறங்கியவேளை அவ்வழியே ரோந்து நடவடிக்கையில் ஈடுட்டிருந்த பொலிஸார் திருடர்களை கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.

இவர்கள் தப்பியோட முற்பட்ட வேளை பொலிஸார் கைத்துப்பாக்கியினால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து திருடர்களைப் பிடித்துள்ளனர்.

குறித்த வீதியால் அதிகாலையில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை வீதி ஒழுங்கையில் இரண்டு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளை தொட்டுப்பார்த்தபோது எஞ்சின் சூடாக இருந்ததனால் அப்பிரதேசத்தில் தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.

அச்சமயம் திருடர்கள் தப்பியோட முயற்சித்தவேளை பொலிஸார் கைத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கிச் சுட்டனர். அப்போது கூரை மீது இருந்தவர் கைதுசெய்யப்பட்டார். அதையடுத்து மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சுப்பர் மூன் பிரகாச சந்தினைப் பார்ப்பதற்கு ஏறாவூர் சவுக்கடிக் கடற்கரைக்கு பொதுமக்கள் சென்றிருந்த வேளையே இக்கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. எனினும் எப்பொருளையும் திருடர்களால் எடுக்க முடியவில்லை. குறித்த வீட்டு உரிமையாளர்கள் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைவாய்பிற்கு சென்றுள்ளனர். அவ்வீட்டிலிருந்த ஏனையவர்கள் கடற்கரைக்குச் செல்லாது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் நடவடிக்கையினைப் பாராட்டி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸிர் ஊர்மக்கள் சார்பில் பரிசுப் பொதிகளை கையளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -