அஸ்ரப் மாபீர்-
இந்த நாடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஜெர்மன் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பயிஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அண்மையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளோராட்சி அமைச்சில் ஜெர்மன் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜான் ரோட் உடனான சந்திப்பினை அடுத்தே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மேட்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் உயர்ஸ்தானிகருடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
மேலும் இது தொடர்பில் மதிப்பு வழங்கிய ஜெர்மன் நாட்டு உயர்ஸ்தானிகர் இத்திட்டத்திட்கு ஜெர்மன் அரசினூடாக தொழில்நுட்ப உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பில் மேலும் விரிவாக கலந்துரையாட இரு தரப்பினர் எதிர்பாத்துள்ளனர்.