ஞானசார தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை..!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை – தலஹேன பிரதேச மத வழிபாட்டு மத்திய நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து 13 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (2008 தலஹென கிருஸ்தவ தேவாலய மீது தாக்குதல்) மேற்கொள்ளப்பட்டமை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு முன்னதாக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த பிரதிவாதிகளை விடுதலை செய்தது எனவே, அதற்கு சவால் விடுக்கும் வகையில் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ரோகினி வெல்கம மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த சந்தேகநபர்களுக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -