புதிதாக நியமனம் பெற்ற ஆயுர்வேத வைத்தியர்களுக்கு 14 நாட்கள் பயிற்சி - வைத்திய கலாநிதி நக்பர்

பைஷல் இஸ்மாயில் -
யுர்வேத வைத்தியசாலைகளில் நிலவுகின்ற வைத்தியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 107 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் சிரேஷ்ட ஆலோசகரும், அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி நியமனங்களை பெற்ற 107 ஆயுர்வேத வைத்தியர்களுக்கு இரு வாரகால பயிற்சி நெறியை வழங்கும் நோக்கில் கொழும்பு தேசிய பாரம்பரிய மருத்துவ பயிற்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் யுனானி வைத்திய பட்டத்தை முடித்த 21 யுனானி வைத்தியர்களும், சித்த வைத்திய பட்டத்தை முடித்த 11 சித்த வைத்தியர்களும், ஆயுர்வேத வைத்திய பட்டத்தை முடித்த 75 ஆயுர்வேத வைத்தியர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான இரு வாரகால பயிற்சி நெறி முடிவுற்றதும், அவர்கள் தங்களின் கடமையை பொறுப்பேற்கும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், இவர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்க பாரிய முயற்சியை சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் முன்னெடுத்ததாகவும் அவருக்கு வி“டமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -