சுலைமான் றாபி-
தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு நிந்தவூர் கமு/கமு/அல் மதீனா மகா வித்தியாலயத்தில் வாசிப்பு வார நிகழ்வுகள் இன்றைய தினம் (12) இடம்பெற்றன.
இந்நிகழ்வின் விஷேட அம்சமாக இப்பாடசாலையில் அமையப் பெற்றுள்ள நவீன நூலகம் பாடசாலையின் அதிபர் எம். சரிப்டீனினால் திறந்து வைக்கப்பட்டதோடு புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
நவீன நூலகத்தினூடாக வாசிப்பிற்கு உயிரூட்டுவோம் எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.



