அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஒக்டோபர் மாதக் கூட்டம் எதிர்வரும் 23.10.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு ஒலுவில் அல்-ஜா யிஷா மகளிர் வித்தியாலயத்தில் பேரவையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்றது.
போரத்தின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன், தவிசாளர் றியாஸ் உட்பட அனைத்து அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு விசேடமாக மிக விரைவில் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்வதற்காக அணைத்து உறுப்பினர்களையும் ஆயத்தமாகும் படி தலைவர் வேண்டிக் கொண்டார்.
இதன்போது, நவம்பர் மாதத்திற்கான கூட்டம் கல்முனையில் இடம் பெறவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
போரத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும், அங்கத்தவர்களின் நலன்கள் தொடர்பாகவும் மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.