Mohamed Nizous-
தத்தளிக்கும் வேளை
நெத்தலி கை கொடுக்கும்
பொறுப்பான நேரத்தில்
பருப்பும் சுவையாகும்.
சம்பளத்தின் முன் நாள்
சம்பலும் ருசியாகும்
ஆபத்துக்கு பழைய
பாபத்தும் பரவால்லை.
பிரயாணப் பசிக்கு
புரியாணி தேவையில்லை
இரைப்பை இரைச்சலுக்கு
ஈரப் பாணும் இதமாகும்.
பையில காசிருந்தால்
பைவ் ஸ்டார் ஹோட்டலிலே
கையில இல்லாட்டி
காய்ந்த bun பேக்கரியில்.
மெக்டொனால்டில் உண்டாலும்
நக்கி வழித்து உண்டாலும்
அக்கணம் கடந்த பின்னால்
அத்தனையும் வயிற்றில் ஒன்றே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -