க.கிஷாந்தன்-
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி 13.10.2016 அன்றும் தமது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அந்தவகையில் மலையகத்தில் வெலிமடை கட்டுகல்ல தோட்ட தொழிலாளர்கள் வெலிமடை – ஊவா பரணகம பிரதான வீதியில் கட்டுகல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது காட்டிக் கொடுக்காதே தொண்டா, வடிவேலா, எமக்கு ஆயிரம் ரூபா வேண்டும் என பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடதக்கது.