ஹிஜாமா வைத்திய பயிற்சியை பெற்றுக்கொள்ள இலங்கையிலிருந்து 15 வைத்தியர்கள் இந்தியா பயணம்..!

அபு அலா - 
ந்தியாவில் நடைபெரும் ஆயுர்வேத ஹிஜாமா வைத்திய வெளிக்கள பயிற்சி முறையை கற்றுக்கொள்வதற்கா இலங்கையிலிருந்து 15 ஆயுர்வேத வைத்தியர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி நிலையத்தின் பதில் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் இன்று (13) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

10 நாட்களுக்கு நடைபெறுகின்ற இந்த ஆயுர்வேத ஹிஜாமா வைத்திய வெளிக்கள பயிற்சி நெறி இந்தியாவிலுள்ள ஹயித்தரபாத், சென்னை, வேங்களுர் ஆகிய இடங்களிலுள்ள யூனானி மருத்துவக் கல்லூரி மற்றும் யூனானி ஆராய்ச்சி நிலையங்களில் நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.

இந்த பயிற்சிக்காக செல்கின்ற 15 ஆயுர்வேத வைத்தியர்களில் கிழக்கு மாகாணத்திலிருந்து 6 வைத்தியர்கள் செல்வதாகவும் இதில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றும் 3 வைத்தியர்கள் செல்லவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், சுதேச மருத்துவத்துறையின் மாகாண ஆனையாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளமையினாலே இந்த வைத்தியர்கள் இந்தியா செல்லவுள்ளமையும் விஸேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -