சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு சிறப்புக் காப்பீடுகள் தேவை..!

லங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் இவ்வேளை இலங்கையிலுள்ள தேசிய சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர் மற்றும் மலாயர், பறங்கியர் , ஆதிவாசிகள் , மேமன், போரா உட்பட மற்றும் சகல சிறுபான்மையினங்களினதும் உரிமைகளையும் சட்டபூர்வமாகப் பாதுகாக்கக் கூடிய சிறப்பு விதிகள் உத்தேச அரசியல் யாப்பில் இடம்பெற வேண்டும். அத்துடன் அவர்களின் மொழி, மதம், கலாச்சார தனித்துவங்களும் பாதுகாக்கப்படுவதோடு அவற்றின் வளர்ச்சிக்கான அவசர உதவிகளும் உறுதிசெய்யப்பட வேண்டும்

1947 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட சோல்பரி யாப்பில் , சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்காக 29 B பிரிவு இருந்தது போன்று புதிய அரசியல் யாப்பிலும் சில சிறப்பு விதிகள் உள்ளடக்கப்பட வேண்டும். மேலும் சிறுபான்மை மக்ளின் உரிமைகளை உறுதிப்படுத்த 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளுராட்சி மன்றங்கள்,மாகாண சபைகள், பாராளுமன்றம் என்பவற்றிலும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். 

2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீ;ட்டின் படி இலங்கைத்தமிழர், முஸ்லீம்கள், மலையாகத் தமிழர்களுக்கு சிறப்புத் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் . அத்துடன் தனித்தொகுதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்த முடியாத ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கு (மலாயர், பறங்கியர் , ஆதிவாசிகள் , மேமன், போரா போன்றவர்களுக்கு) தேசியப் பட்டில் மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 30மூ மக்கள் சிறுபான்மைச் சமூகங்களாக உள்ளனர். அதே போன்று பாராளுமன்றத்தின் மொத்த அங்கத்தவர் தொகையில் 1/3 பங்கு சிறுபான்மையின பிரதிநிதிகள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

இது விடயத்தில் ஏனைய சிறுபான்மையின அரசியல் கட்சிகளும் , சிவில் சமூக அமைப்புகளும், பெரிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற சிறுமான்மையின பிரதிநிதிகளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

எஸ்.சுபைர்தீன்,
செயலாளர் நாயகம்,
அ.இ.ம.கா.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -