எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஹன்ஸாவுக்கு உதவுங்கள்..!

பூகொடை குமாரிமுல்லையைச் சேர்ந்த முஹம்மத் நஸ்லியின் மகன் முஹம்மத் ஹன்ஸா எலும்பு புற்றுநோயால் (Osteo Sarcoma) பாதிக்கப்பட்டு மஹரகம அபேஷ்ஷா (தேசிய புற்றுநோய் நிறுவனம்) மருத்துவமனையில் கிசிச்சைப்பெற்று வருகிறார். இவர் குமாரிமுல்லை முஸ்லிம் மகாவித்தியாலத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவராவார்.

இவருக்கு இந்தியாவில் எலும்பு மாற்று சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மஹரகம சிறுவர் புற்றுநோயியல் நிபுணர் மஹேந்திர சோமதிலக்க அவர்கள் இந்த சிறுவனுக்கு அவசரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுருத்தியுள்ளார். இந்தியா, வேலூர் Christian Medical College மருத்துவமனையில் சிகிச்சை இடம்பெறவிருக்கிறது. 

இந்த சிகிச்சைக்கு சுமார் 40 இலட்சம் ரூபாய்கள்; செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி சிறுவன் ஹன்ஸாவை நோயிலிருந்து மீள உதவி செய்யுமாறு ஹன்ஸாவின் பெற்றோர் வேண்டுகின்றனர்.

உங்கள் பண உதவிகளை சிறுவனின் தந்தையான முஹம்மத் நஸ்லி எனும் 
கீழ்காணும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடலாம்.

M.H.M. NASLY, 
Bank Account : 77730497, 
Branch : Bank of Ceylon ,Pugoda 
( Father Mobile No. 0777192029)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -