அப்துல்சலாம் யாசீம்-
ஜனாதிபதி செயலகத்தினால் செயற்படுத்தப்படும் தேசிய உணவுற்பத்தி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (20) திருகோணமலை பஸ் நிலையத்திற்கருகாமையில் நச்சுப்பொருளற்ற விவசாய உற்பத்தி விற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இங்கு விற்பனைக்கு உள்ள பொருட்கள் இரசாயன களை நாசினிகள் இன்றி உற்பத்தி செய்யப்பட்டவையாக காணப்படுவதுடன் தாமானவையாகவும் காணப்படுபடுகின்றன. பொது மக்கள் மற்றும் அரச அதிகாரிகளும் குறித்த பொருட்களை முனைப்புடன் வாங்குவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்நிகழவில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோஇ கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதிஇ திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.