நான் இல்லாத காலத்திலும் மல்லிகை வரும் - டொமினிக் ஜீவா

‘’கடந்த காலங்களில் கிட்டதட்ட அரை நூற்றாண்டு நெருங்கிய நிலையில் மல்லிகையை இதயபூர்வமாக நேசித்து என்னுடைய வாழ்க்கைப் பாதையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி, இந்த உலகத்திற்கு தலைமை தாங்கக் கூடிய இலங்கை மண் என்பதை நிலை நிறுத்த பல்வேறு உதவிகளை செய்த உங்கள் ஒவ்வொருவரையும் மறக்காமல் இருக்கிறேன்.’’

இவ்வாறு மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவாகளுடான சந்திப்பு கடந்த 16.10.2016 அன்று யாழ்ப்பாணம் நாவலா; மண்டபத்தில் நடைபெற்ற பொழுது குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில்,

‘’மல்லிகை இன்று வரவில்லைதான். ஆனாலும் என்னையும் மல்லிகையும் மதித்து என்னை சந்திக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்மான நன்றிகள் கூறிக் கொள்வதோடு. இன்று சில பல காரணங்களால் இன்று மல்லிகை வராவிடினும், நான் இல்லாத காலத்திலும் மல்லிகை வரும் என்பதை உறுதி அறிக்கிறேன்.’’எனக் குறிப்பிட்டார்.

இளவாலை மணியத்தின் ஏற்பாட்டிலும் எழுத்தாளர் தேவி பரமலிங்கத்தின் உதவியுடனும் ஏற்பாட்டு செய்யப்பட்ட இச்சந்திப்புக்கு தலைமை வகித்த மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்கள் தனது உரையில், ‘’ஜீவாவை பொறுத்த வரை மல்லிகையை ஐம்பது வருடத்தை பூர்த்திக்கு அவரால் கொண்டுப் போக முடியாமல் போனாலும், அவர் இன்று தொடர்ந்து பத்து மதினைந்து வருடம் தொடர்ந்து வரும் சஞ்சிகைகள் புரியாத பல சாதனைகளை மல்லிகை வழியாக சாதித்தவர். 

உதாரணத்திற்கு போர் காலச் சூழலில் அச்சுத்தாள் நெருக்கடி மத்தியிலும் அப்பியாச கொப்பித் தாளிலும் மல்லிகை நடத்தியவர் அவர். அவருக்கு என ஒர் அரசியல் சமூக பின்ணணி இருந்தது. அவரது உழைப்பில் அர்ப்பணிப்பு இருந்தது ‘’ என்றார்.

தேவி பரமலிங்கம், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், டாக்டர் எம்.கே.முருகானந்தன், கோகிலா மகேந்திரன், க.சட்டநாதன், பேராசிரியர் எஸ்.சிவசந்திரன், அநாதரட்சகன், ஆர். நடராசா, சுந்தரம் திவகலாலா, ராதையன். பி.ஏ.ஆண்டனி, எஸ்.கே.ராஜேந்திரன், சமரபாகு சீனா உதயகுமார், புலோலியூர் வேல்நந்தன் ஆகியோர் டொமினிக் ஜீவா அவர்களைப் பற்றி உரையாற்றினார்கள்.

இளவாலை மணியம் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்வினை மேமன்கவி ஒழுங்கமைத்திருந்தார்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவா;களுடான சந்திப்பு கடந்த 16.10. 2016 அன்று யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற பொழுது மேமன்கவி நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதோடு, தெணியான் அவர்கள் தலைமை நிகழ்த்துவதையும், டொமினிக் ஜீவா அவர்களுக்கு பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா பொன்னாடைப் போர்த்துவதையும், தேவி பரமலிங்கம். பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், டாக்டர் எம்.கே.முருகானந்தன், கோகிலா மகேந்திரன், க.சட்டநாதன், பேராசிரியர் எஸ்.சிவசந்திரன், அநாதரட்சகன், ஆர். நடராசா, சுந்தரம் திவகலாலா, ராதையன்.பி.ஏ.ஆண்டனி, எஸ்.கே.ராஜேந்திரன், சமரபாகு சீனா உதயகுமார், புலோலியூர் வேல் நந்தன் ஆகியோர் உரையாற்றுவதையும் இளவாலை மணியம் நன்றியுரை நிகழ்த்துவதையும் படத்தில் காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -