அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஹக்கீம் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை...!

அம்­பாறை மாவட்­டத்தில் பொது மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் அநே­க­முள்­ள­தா­கவும், யானை – பொது­மக்கள் மோதல் இந்த மாவட்­டத்­திலும் பார­தூ­ர­மாக உரு­வெ­டுத்­துள்­ள­தா­கவும், வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­தினர் யானை­களைத் தடுப்­ப­தற்கு மின்­சார வேலி­களைப் போட்­டா­லும்­கூட, உண்­மையில் காட்டு யானை­களின் அட்­ட­கா­சத்­தினால் பாதிக்­கப்­படக் கூடிய மக்கள் பாது­காக்­கப்­ப­டு­கின்­றார்­களா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தா­கவும், அந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு மேலும் சாத்­தி­ய­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டு­மெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் பகி­ரங்க வேண்­டுகோள் ஒன்றை விடுத்தார்.

அத்­துடன் கரும்புச் செய்­கையில் மக்கள் பாரிய பிரச்­சி­னையை எதிர்­நோக்­கு­வ­தா­கவும், அர­சாங்க அதிபர் முன்­னி­லையில் அதி­கா­ரிகள், கரும்புச் தொழிற்­சாலை உரி­மை­யா­ளர்கள் உட்­பட கரும்புச் செய்கை விவ­சா­யி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு பல கூட்­டங்கள் நடத்­தப்­பட போதிலும் உரிய பலன் கிட்­ட­வில்லை எனவும், ஆகையால், கரும்புச் செய்­கை­யோடு சம்­பந்­தப்­பட்ட அந்த அப்­பாவி விவ­சா­யி­களின் பிரச்­சி­னை­களில் ஜனா­தி­பதி தலை­யிட்டு உரிய தீர்­வு­களை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபையின் மஹா­ஓய நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றுப் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இந்தக் கோரிக்­கை­களை முன்­வைத்தார். இந்­நி­கழ்வில் ஜனா­தி­பதி பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டார்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு உரை­யாற்­றுப்­பொ­ழுது மேலும் தெரி­வித்­த­தா­வது, இந்தச் சுத்­தி­க­ரிப்பு நிலையம் மூலம் 17 ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு நீர் வழங்­கப்­ப­டு­கின்­றது.

இத­னோடு சேர்த்து அம்­பாறை மாவட்­டத்தில் 80 வீத­மான நிலப்­ப­ரப்பில் வசிப்­ப­வர்­க­ளுக்கு தூய நீரை பெற்றுக் கொடுக்கக் கூடி­ய­தாக இருக்கும்.

2019ஆம் ஆண்­டாகும் போது ஜனாதிப­தி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வழி­காட்­டலில் சிறு­நீ­ரக நோய்­க­ளினால் பெரிதும் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்ள ரஜ­ரட்ட பிராந்­தி­யத்தில் அநு­ரா­த­புரம், பொல­ன­றுவை மாவட்­டங்­களில் 90 வீத­மான நிலப்­ப­ரப்பில் வசிப்­போ­ருக்கு சுத்­த­மான நீரைப் பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பு எங்­க­ளுக்கு கிட்டும்.

அடுத்­தாண்டில் 3 இலட்சம் மில்­லியன் ரூபா செலவில் பாரிய நீர் விநியோகத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் அரைவாசியான ஒன்றரை லட்சம் ரூபாய்கள் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கான நீர் விநியோகத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -