வடக்கில் உருவாகியுள்ள “ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த தாம் புதிய குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆவா குழுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவோ, அந்த குழுவின் உறுப்பினர்களை கைது செய்யவோ பொலிஸார் தவறியுள்ளனர். ஆகவே பொலிஸாரின் நடவடிக்கைகளை தாம் நிறைவேற்றப் போவதாவும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிஸாருக்கு இரு வாரங்கள் கால அவகாசம் வழங்குவதாகும், அதற்குள் பொலிஸார் “ஆவா“ குழுவை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் தாம் “வாணா” என்ற ஒரு புதிய குழுவை உருவாக்குவதாகவும், அப்படி உருவாக்கினால் பொலிஸாருக்கு குறித்த இரு குழுக்களையும் கட்டுப்படுத்த நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.