உயிரிழந்த மாணவர்களுக்கு நட்டஈடு -வட மாகாண சபையில் வலியுறுத்தல்

பாறுக் ஷிஹான்

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு ஒருகோடி ரூபா நட்டஈட்டை அரசாங்கம் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிவைக்க வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்தார். வடமாகாண சபையின் 64ஆவது அமர்வு இன்று(27) காலை 9.30 அளவில் யாழ் கைதடியிலுள்ள வடமாகாண கட்டிடத்தில் கூடிய போது மேற்கண்டவாறு கூறினார்.

சபை நடவடிக்கை ஆரம்பமாகிய வேளை திடிரென எழுந்த உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரு மாணவர்களுக்கும் ஒருகோடி ரூபா நட்டஈட்டை அரசாங்கம் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என கூறினார்.

இந்நிலையில் சபையில் இருந்த சகல உறுப்பினர்களும் எழுந்து நின்று அரசாங்கம் குறித்த மாணவர்களது குடும்பத்தினருக்கு நட்டஈட்டை வழங்க வேண்டும் என்று ஏகோபித்த மனதுடன் சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை ஏற்று வலியுறுத்தினர்.

இதன் போது குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் அரசாங்கத்திடம் இதனை முன்வைப்பதாகவும் சபைக்கு இன்று தலைமை தாங்கிய அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்தார். அத்துடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றிருப்பதால் சபைக்கு அவைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -