பிக்குகளுக்கான ஒழுங்கு விதிகள் : பாராளுமன்றத்தில்

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பிக்குகளுக்கான ஒழுங்கு விதிகள் தொடர்பான சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பது குறித்தான இறுதி தீர்மானத்தை எடுக்கும் முகமாக புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜய தாஸ ராஜபக்ஷ இன்ரைய தினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

குறித்த சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்ற திட்ட மிடப்பட்டிருந்த போதிலும் நாட்டிலுள்ள பௌத்த பிக்கு அமைப்புகள் பெரும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. இத்தகைய நிலையில் இதனை மீள திருத்தம் செய்த பின்னர் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

இந்நிலையில் பிக்குகள் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு பிரத்தியேக நீதிமன்றம் உள்வாங்கும் திட்டத்திற்கே பௌத்த பிக்குகள் பெரும் எதிர்ப்பினை வெளியிட்டனர். எனினும் தற்போது குறித்த சட்டமூலம் அமைச்சினால் மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த சட்டமூலம் தொடர் பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநா யக்க தேரர்களுடன் இன்று நீதி அமைச் சர் விஜயதாஸ ராஜபக்ஷ விசேட பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சட்டமூலம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கும் முகமாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சட்டமூலம் தொடர்பில் ஏனைய பௌத்த பீட மகாநாயக்க தேரர்களிடமும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மேற்குறித்த பேச்சுவார்த்தை முடிந்த கையோடு இந்த சட்டமூலத்தையும் அடுத்த வாரம் பாராளுமன்ற விவாதத்திற்கு உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -