81 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வெட் வரி நீக்கம்.! (விபரம்)

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் 81 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வெட் வரி விலக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

வெட் வரி திருத்த சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாத பிரதிவாதங்களின் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய அரிசி, சீனி, பருப்பு, கருவாடு, ரின்மீன், மாசி, பாண், பால், தேயிலை, றப்பர், தேங்காய், தேங்காய் எண்ணெய், தேய்காய் பால், முட்டை, இறால், பழ வகை, மரக்கறி, நெத்தலி, வெங்காயம், உருளைக்கிழங்கு, வெங்காயம், பயறு, மிளகாய், கௌபி, கடலை, கொத்தமல்லி, கஜு, உரம், மருந்து, ஆயுர்வேத மருந்து, 

போக்குவரத்து சேவை, டீசல், மண்ணெண்ணெய், பெற்றோல், உற்பத்தி வரி உள்ளடக்கப்படுகின்ற வாகனங்கள், விமானத்திற்கான எரிபொருள், கொள்கலன், விவசாய விதை, விவசாய இயந்திரம், கடற்றொழில் உபகரணங்கள், நிர்மாணத்துறை உபகரணங்கள், மின்சாரம், மின்சாரத்தை பாதுகாக்கின்ற உபகரணங்கள், சூரியசக்தி, கல்வி சேவை, நூலக சேவை, கணினி மற்றும் உதிரிப்பாகங்கள், கணினி பயிற்சி நிலையங்கள், அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள்,

உயிர்ப்பாதுகாப்பு காப்புறுதி, கையடக்கத் தொலைபேசி, மாணிக்கக்கல், முத்து, தங்கம், வைரம், பிளாட்டினம், வீடமைப்புக்கு வசதிகளை ஏற்படுத்தல், விற்பனை செய்தல், வாடகை, குத்தகை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கே இந்த வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து கிடைக்கின்ற எந்தவகையான முறைப்பாடுகள் தொடர்பிலும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் விசாரணைகளை நடாத்தவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


அதன்படி வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ள பொருட்களின் விபரம் வருமாறு,

1. கோதுமை
2. கோதுமை மா
3. அரிசி
4. சீனி
5. பருப்பு
6. கருவாடு
7. டின் மீன்
8. மாசி
9. மசாலா தூள் வகைகள்
10. பாண்
11. பால்
12. தேயிலை
13. இறப்பர்
14. தேங்காய்
15. தேங்காய் எண்ணெய்
16. தேங்காய் பால்
17. முட்டை
18. இறால்
19. பழ வகை
20. காய்கறிகள்
21. உருளைக்கிழங்கு
22. நெத்தலி கருவாடு
23. சிறிய வெங்காயம்
24. பெரிய வெங்காயம்
25. வெள்ளைப்பூடு
26. பயறு
27. மிளகாய்
28. கௌப்பி
29. கடலை
30. உழுந்து
31. கொத்தமல்லி
32. நிலக்கடலை
33. உர வகைகள்
34. மருந்துகள்
35. மருந்து தயாரிப்பு இயந்திரங்கள்
36. மருந்து தயாரிப்பு உபகரணங்கள்
37. மருந்துப் பொதியிடல் உபகரணங்கள்
38. ஆயுர்வேத மருந்து தயாரிப்புகள்
39. சக்கர நாற்காலிகள்
40. ஊன்றுகோள்
41. காதுகேளாதோர் கருவி
42. கண் தெரியாதவர்களுக்கான வெள்ளை பிரம்பு
43. பிரெயில் இயந்திரங்கள்
44. பிரெயில் காகிதம்
45. மூக்குகண்ணாடி
46. மூக்குக்கண்ணாடி தயாரிப்பு பொருட்கள்
47. வெளிநோயாளர் சேவைகள்
48. இரத்த மாற்று சிகிச்சை
49. நோய்களை கண்டறியும் சோதனைகள்
50. அறுவை சிகிச்சை சேவைகள்
51. டீசல்
52. போக்குவரத்து சேவைகள்
53. மண்ணெண்ணெய்
54. பெட்ரோல்
55. விமான எரிபொருள்
56. உற்பத்தி வரி அறவிடப்படும் வாகனங்கள்
57. பவுசர்
58. விவசாய விதைகள்
59. விவசாய செடிகள்
60. விவசாய இயந்திரங்கள்
61. டிராக்ட்டர்கள்
62. நெல் அரைக்கும் இயந்திரங்கள்
63. பேக்கரி தயாரிப்பு இயந்திரங்கள்
64. பால் பதப்படுத்தும் இயந்திரங்கள்
65. மீன்பிடி உபகரணங்கள்
66. கிரீன்ஹவுஸ்
67. கட்டுமான உபகரணங்கள்
68. மின்சாரம்
69. சூரிய மின் உற்பத்தி உபகரணங்கள்
70. மின்வலு சேமிப்பு விளக்கு
71. மின்வலு சேமிப்பு விளக்குக்கான உற்பத்தி பொருட்கள்
72. கல்வி சேவைகள் 
73. நூலக சேவைகள்
74. கணினிகள் மற்றும் உதிரிப்பாகங்கள்
75. கணினி மென்பொருள்
76. அச்சிடப்பட்ட புத்தகங்கள்
77. விளையாட்டு உபகரணங்கள்
78. ஆயுள் காப்புறுதி
79. கையடக்க தொலைபேசிகள்
80. இரத்தினக்கல், முத்து, வைரம்
81. தங்கம், பிளாட்டினம்
82. வீட்டுக்கான நிலம் விற்பனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -