வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அது தொடர்பாக பிரான்சில் வாழும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூக வெளியேற்றம் தொடர்பான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் அதிதியாக பங்கேற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பங்கேற்று காத்திரமான, உணர்வுபூர்வமான உரையொன்றை நிகழ்த்தினார். வடக்கு முஸ்லிம்களின் தொடர்ச்சியான அகதி வாழ்வு, அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், மற்றும் மீள்குடியேற்றத்தில் அவர்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்தும் அவர்களது உரையில் சிலாகித்தார்.