அடம்பன் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச எல்லைக்குள் காணப்படும் அடம்பன் எனும் கிராமத்தில் காணப்படுகின்றது.
1960ம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளிவாசல் இக்கிராமத்தின் பல்வேறு முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது.
1989 யுத்த காலத்தின்போது இக்கிராமத்தில் வாழ்ந்த அனைத்து முஸ்லிம்களும் புலிகளால் விரட்டப்பட்டு இப்பள்ளிவாசலும் உடைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இப்பள்ளிவாசல் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. (தகவல்: பள்ளிவாசல் தலைவர் கே.அப்துல் மஜீட் மற்றும் கிராமவாசிகள்)
இதுபோன்ற பதிவுகள் எமது சமூகத்தில் பல காணப்பட்டாலும் அவை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் பாரிய துரோகமாகும்.
இன்று காணப்படுகின்ற சமூக வலையத்தளங்கள் ஊடகவேனும் தாம்சார்ந்த பிரதேசத்தில் காணப்படும் இதுபோன்ற தகவல்களை பதிவிட முன்வாருங்கள் அல்லது உதவுங்கள்.
ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்.