ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினர் அன்சார் ஹாஜியார் தலைமையில் குச்சவெளி பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி போராளிகளுக்கான கலந்துரையாடல் (இறக்கக்கண்டி) யில் நேற்று 18.08.2016 பிற்பகல் 4.00 மணியளவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் வளர்ச்சி தொடர்பாகவும், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் கல்வித்துறை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி அல்ஹாஜ் ஜே.எம்.லாகிர், ஆர்.எம்.அன்வர், முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஆஸிக், இக்பால் நகர் கச்சிமுகமது (நளீம்) மத்திய கிளை உறுப்பினர்கள், கட்சியின் போராளிகள் மற்றும் பிரமுகர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகிர் அவர்கள் உரையாற்றுகையில்..
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை அடிமட்ட தொண்டர்களின் ஊடாகவே வளர்க்க வேண்டிய தேவைப்பாடு ஏற்பாட்டிருக்கின்ற காரணத்தால் கட்சியினுடைய தலைமையையும் கட்சியையும் பாதுகாக்க வேண்டிய கால கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். தமிழ் சமூகம் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் அரசு கட்சியின் கீழ் தொடர்ந்தும் ஒன்றுபட்டு செயற்பட்டு வருகின்றது. முஸ்லிம்களாகிய நாங்கள் முஸ்லிம் சமூகம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஒன்றுபட்டு செயற்பட்டு வருகின்ற தருவாயில். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில சக்திகள் கட்சியினுடைய தலைமையையும், கட்சியையும் தகர்ப்பதற்கு முயற்ச்சித்து வருகின்றது. இதற்க்கு நாங்கள் எவரும் இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிப் போமானால் எதிர் வருகின்ற இனப்பிரச்சினைக்கு முஸ்லிம்களுக்கான பங்கை வகிப்பதற்க்கான கட்சி ஒன்று இல்லாமல் போய் விடும்.
இதற்காகவே சில தலைமைகள் கட்சியையும், கட்சித்தலைமையும் தகர்ப்பதற்கு முயற்ச்சித்து வருகின்றது. மறைமுகமாக இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான வழியினை முஸ்லிம்களுடைய பக்கமான நியாங்களை எடுத்துக்கூற தலைமை இல்லாமல் போய் விடும். ஆரம்ப கட்ட நடவடிக்கையாக என்னுடைய மனசாட்சியின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய நான் ஆரம்ப கால உறுப்பினர் என்ற வகையிலும் இந்தக் கட்சி உருவாக்கத்தில் இளைஞானாக சேர்ந்தவன் என்ற வகையிலும் கட்சிக்கும், கட்சியினுடைய தலைமைக்கும் யாரும் பங்கம் விளைவிக்க விட மாட்டேன். என்பதோடு நான் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் குறைந்த காலத்திற்க்குள் திருகோணமலை மாவட்டத்தினுடைய சகல பிரதேசங்களுக்கான அபிவிருத்தியையும், வேலை வாய்ப்புக்களையும் பிரதேச பேதம் இன்றி கொடுத்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.