பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலின் செயற்பாடு பாராட்டத்தக்கதொரு விடயமாகும் - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

எம்.ரீ.ஹைதர் அலி-
காத்தான்குடி டெலிகொம் வீதி மிக விரைவாக செப்பனிடப்பட்டு முடிக்க வேண்டியிருப்பதால் அவ்வீதியில் வசிக்கும் மக்கள் தொடக்கம் பொது நிறுவனங்களும் பாரிய ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான ABC கல் கலவைகள் வீதி ஓரங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுவருகின்றன. இவ்வீதியானது 6 மீட்டர் அகலமிக்க வீதியாக அமையவிருப்பதால் வீதியோரமாக இருக்கும் கடைகள் அகற்றப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளன.

எனவே அதனை முன்கூட்டி கருத்திற்கொண்டு புதிய காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாயலின் இருமருங்கிலும் வீதியோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகள் அகற்றப்படலாம் என்ற காரணத்தினால் பதுரியா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை தங்களுடைய செலவில் பதுரியா மையவாடியின் அருகாமையில் கூடாரமொன்றினை அமைத்து அதனுள் சந்தை கடைகளை ஏற்படுத்தி வீதியோரங்களில் இருந்த கடைகளை இடமாற்றம் செய்து உள்நோக்கி எடுத்தமைக்கு பள்ளிவாயல் நிருவாக சபையினரை பாராட்டுவதுடன் நன்றி கூறுவதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

அந்த வகையில் இவ்வாறான செயற்பாடனது உண்மையில் பொதுமக்கள் மாத்திரமின்றி சமூக நிறுவனங்களும் அபிவிருத்தி பணிகளுக்கு ஆதரவு தருகின்ற நிலைமை இப்பொழுது காத்தான்குடியில் தோன்றியிருக்கின்றது, ஆகவே இவ்வாறான நல்ல பணிகளுக்கு நாங்கள் எல்லோரும் ஒத்துழைக்கின்றபோது மிக பாரியளவிலான அபிவிருத்திகளை எதிர்காலத்தில் மிக இலகுவாக முன்கொண்டுசெல்ல முடியும் அந்த வகையில் பதுரியா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையின் செயற்பாடானது ஒரு முன்மாதிரியான செயற்பாடாக நாங்கள் பார்கின்றோம் என தெரிவித்ததோடு வீதி ஆரம்பிக்கப்படவிருக்கின்ற இடத்திற்கு 2016.08.18 ஆந்திகதி (புதன்கிழமை) கள விஜயமொன்றை மேற்கொண்டு பதுரியா சந்தையினையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் பார்வையிட்டார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -