உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்த நடவடிக்கை..!


2012ம் இலக்க 22வது உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இதன்படி, இது குறித்து கலந்துரையாடி அமைச்சரவைக்கு பணிப்புரையை சமர்ப்பிப்பது தொடர்பில், அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இந்தக் குழுவின் தலைவராக அமைச்சர் பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். 

இதன் ஏனைய உறுப்பினர்களாக ரவூப் ஹக்கீம், சுசில் பிரேம ஜெயந்த, வஜிர அபேவர்த்தன, ரிஷாட் பதியூதின், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், இந்தக் குழுவின் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -