"யாழ் முஸ்லீம்களின் மக்கள் பிரதிநிதிகள் நல்லிணக்கத்திற்கான கருத்து கோரும் நடவடிக்கையில் பங்கேற்பு"

பாறுக் ஷிஹான்-

ரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நல்லிணக்கத்திற்கான கருத்து கோரும் நடவடிக்கையில் யாழ் முஸ்லீம் மக்களின் சார்பாக பல தரப்பு பிரதிநிதிகள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நல்லிணக்கத்திற்கான கருத்து கோரும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை(6) யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமான இந்த நல்லிணக்க பொறிமுறைக்கான கருத்துப் பதியும் நிகழ்வில் பல மக்கள்,மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துரைத்துள்ளனர்.

இதன்போது காணாமல் போனோர் யுத்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நட்டஈடு வழங்குதல் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் தமது கருத்துக்களை யாழ் முஸ்லீம்களின் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தெரிவித்துள்ளனர். இந்த கருத்து பகிர்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் ரொசான் தமீம்இ ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினரும் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான சரபுல் அனாம் மற்றும் யாழ் முஸ்லீம் சமூக சேவகர் முஹமட் நஸீர் ஆகியோர் பங்கு பற்றினர்.

மேலும் இவ்வமர்வு நாளை சாவகச்சேரி பகுதியில் நடைறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -