அட்டாளைச்சேனையில் வீட்டுக்கு வீடு மரம் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

எம்.ஏ.றமீஸ்-
ட்சியினூடாக சமுகத்தினை இணைக்கும் செயற் திட்டத்தின் கீழ் மக்களுக்கு பாரிய நன்மைகளைப் பெற்றுத் தரும் மரங்களை நடும் வேலைத்திட்டத்தின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்துணர்ச்சி பெற்று மேலும் விருட்சம் பெறும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் இன்று (01) அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடந்தும் அவர் உரையாற்றுகையில், எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஜ் கட்சியினை புனரமைக்கும் வேலைத்திட்டம் தற்காலத்தில் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இக்கட்சியின் செயற்பாடுகளில் அதிகமான இளைஞர்களை உள்வாங்கி அவர்கள் மூலம் எதிர்காலத்தில் பல்வேறான பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இக்கட்சியின் வளர்ச்சிக்காய் பல்வேறான கொள்கைத் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றார். அதடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை புத்துணர்ச்சியுடன் கூடிய எழுச்சிக்காய் ஓகஸ்ட் முதலாம் திகதி திருகோணமலை மாவட்த்தில் கட்சியின் தலைமை மூலம் வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பிரதேசத்திலும் இந்நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் சின்னம் மரம் என்பதால் மரம் நடும் திட்டம் முதன்மைப்படுத்தப்பட்டது. மரத்தின் மூலம் நாம் பல்வேறான நன்மைகளைப் பெற்று வருகின்றோம். அதேபோல் எமது கட்சியினாலும் மக்கள் நன்மையடையும் வகையில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மரம் நடும் வேலைத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள வீடுகளுக்குச் சென்று அவர்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. இதனால் மக்கள் நிச்சயம் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் கிட்டுகின்றது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள மூத்த போராளிகள், இளைஞர்கள், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் ஒன்றிணையக் கூடிய சந்தர்ப்பம் இதன்மூலம் ஏற்படுகின்றது.

ஏதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நகர திட்டமிடல் அசை;சின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மூலம் பல்வேறான அபிவிருத்தி முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளோம். அதனடிப்படையில் 19ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் பாரிய நடமாடும் சேவையினை மேற்கொள்ளவுள்ளோம். இந்நடமாடும் சேவையின் மூலம் சுமார் 20 இற்கு மேற்பட்ட அமைச்சின் திணைக்களங்கள் போன்ற பல சேவைகள் இதன்போது வழங்கப்படவுள்ளன.

எதிர்வரும் 20 ஆம் திகதி சுகாரத்துறை சம்பந்மான பாரிய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ப்படவுள்ளன. இதன்மூலம் அம்பாறை மாவட்டத்தில் குறைபாடாகக் காணப்படும் சுகாதாரத்துறை பலகோடி ரூபா பெறுமதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதோடு வீதிகள், விளையாட்டு மைதானம், உட்கட்டமைப்பு வசதிகள் போன்றன பாரியளவில் விருத்தி பெறவுள்ளன என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -