பாதயாத்திரை காரணாமாக கொழும்பில் போக்குவரத்துக்கு தடை..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கூட்டு எதிரணியினரின் ஊர்வலம் இன்று (01) பிற்பகல் பஞ்சிகாவத்தை, மருதனை சுற்றுவட்டம் மூலம் காமினிகோல் சந்தியூடாக ஹைட்பார்க் மைதானப் பகுதிக்கு பயனித்தன இன்று அலுவலக நாளாக இருந்ததால் பொதுமக்களும், அரச அலுவலர்களும் பெரும் சிரமத்திற்குள்ளானதுடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமை புரிந்தவர்கள் கடமை முடிந்தவுடன் கொழும்பு மற்றும் தூர இடங்களில் உள்ளவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்ல முடியாதளவு பாதைகளில் பேரணி போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியிருந்தன.

குறித்த பேரணி சென்ற இடங்களு10டாகச் செல்லும் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் செல்ல முடியாதளவு பாதைகள் தடையானதால் மக்களும், அலுவலர்களும் பல அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியிருந்ததை நேரடியாக அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக இன்றைய தினம் வாரத்தின் முதல் அலவலக தினமானதால் இந்தப் பேரணி பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. பலர் குறித்த குழுவினரை ஏசிப் பேசிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -