பொதுபலசேனா அமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கும், அசாத்சாலிக்கும் எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளது.
நாட்டில் முஸ்லிம் கவுன்ஸிலும் அசாத்சாலியும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பரப்பி வருவதாகவும் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவதாகவும் இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
முஸ்லிம் கவுன்ஸில் அண்மையில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மஹியங்கனையில் ஆற்றிய உரை இனவாதத்தை தூண்டும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.