மாவட்ட மட்ட மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் நிந்தவூர் வீரர் மெய்வல்லுனர் சாம்பியனாக தெரிவு..!

சுலைமான் றாபி-

2016 ம் ஆண்டிற்கான விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் பிரதேச செயலகங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் நிந்தவூரைச்சேர்ந்த எம்.ஐ.எம். அசான் குண்டு போடுதல், நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று நடப்பாண்டில் அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் போட்டியில் (Field Event) நிகழ்ச்சிகளின் சம்பியனாக தெரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (16) காரைதீவு விபுலானந்தா பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வின் போதே இவரிற்கு இம்மூன்று தங்கப் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை நிந்தவூரைச்சேர்ந்த எம்.ஐ.எம். அஜ்மல் எனும் வீரர் முப்பாய்ச்சலில் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தினை சுவீகரித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -