கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை இடை நடுவே நின்றதால் பயணிகள் அவதி..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ன்று (25) காலை 8.45 மணிக்கு கொழும்பு கோட்டை பிரதான புகையிர நிலையத்திலிருந்து அனுராதபுரம் மதவாச்சியூடாக தலைமன்னார் செல்லும் புகையிரதம் இயந்திரக் கோலாறு காரணமாக பிற்பகல் 2.30 மணியளவில் மடு றோட் பகுதியில் இடை நடுவே நின்று விட்டதால் பயணிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்றபட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக பயணிகள் இரயில் சாரதிகளிடம் வினவியபோது இயந்திரக் கோலாறு காரணமாக இருப்பதால் அனுராத புரத்திலிருந்து பொறியிலாளர்கள் வந்தே இயந்திரத்தினை பழுதுபார்க்க வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்படுமெனவும் பயணிகள் அனைவரும் பேரூந்துகளில் செல்லுமாறு கோரியதால் பயணிகள் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் மன்னாருக்குச் சென்றதாக குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக மடுறோட் புகையிரத நிலைய அதிகாரிகளிடம் வினவியபோது குறித்த இரயிலின் இயந்திரத்திலிருந்து ஒயில் வெளியேறியதால் இரயில் ஓடமுடியாது நிறுத்தப்பட்டதாகவும் பின்னர் சாரதிகளால் அதனை தற்காலிகமாக பழுது பார்க்கப்பட்டு இன்று மாலை 5.15 மணியளவில் மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -