நிந்தவூர் வீதி அபிவிருத்தியில் ஊழலா..? உலமா கட்சி கேள்வி

நிந்தவூரில் தற்போது நடைபெற்று வரும் வீதி அபிவிருத்தி வேலைகளில் பெரும் ஓழல்கள் நடை பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுவதால் இத பற்றி அரசு ஆராய வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

தற்போது நிந்தவூரின் மூன்றாம் குறுக்குத் தெரு பாதை புனரமைப்பு வேலை நடைபெற்று வருகிறது. அதற்காக பிரதி அமைச்சர் ஒருவரால் 48 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளதாகவும் இந்த அபிவிருத்தி வேலையில் பல ஊழல் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த வீதி அபிவிருத்தி வேலைகள் என்பது குறிப்பிட்ட பிரதி அமைச்சரின் ஆதரவாளர் ஒருவரால் கொந்தராத்து எடுக்கப்பட்ட நிலையில் வீதி என்பது மக்கள் பாவனைக்கு தரம் அற்ற நிலையில் புனரமைப்பு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது என அறிய முடிகிறது.

இது சம்மந்தமாக நிந்தவூர் அபிவிருத்தி குழு (Nறுஊ) ௧வனம் செலுத்தாமல் இருப்பதாகவும் பொது மக்கள் உலமா கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இது விடயமாக நிந்தவூர் மக்கள் பலதடவை அரச அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவலையுடன் மக்கள் தெரிவிக்கின்றனர்

நிந்தவூரில் பல வீதிகள் மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் இருக்கும் போது மக்கள் பாவனையற்ற நிலையில் உள்ள விவாசய பிரதேசமான செங்கப்படை வயல் காணி பிரதேச கொங்கிரிட் வீதியை மீண்டும் புனரமைப்பு செய்யவுள்ளதாக அறிய முடிகிறது. இதன் உள் நோக்கம் என்ன என மக்கள் கேள்வி எழுப்புவதை அரசாங்கம் அசட்டை செய்யக்கூடாது என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -