நாட்டினதோ அல்லது ஒரு சமுகத்தினதோ நலனை தீர்மானிப்பதில் சகலருக்கும் மனிதாபிமானம் இருக்கவேண்டும்!

எம்.வை.அமீர் -
ங்கெங்கு எல்லாம் பல்லினத்தன்மை நிராகரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நாம் நமது சுயவாழ்க்கைக்கானஉரிமையை இழக்கிறோம். ஏதாவது ஒரு பிரதேசம் எங்களுக்கு மட்டும்தான் என நாங்கள் தீர்மானிக்கின்ற போதுஅங்கு பல்லினத்தன்மையை நாங்கள் இழந்து விடுகின்றோம். அதனூடாக எங்களது சுய இருப்பையேகேள்விக்குறியாக்குகிறோம். பல்லினத்தன்மை நிராகரிக்கின்ற அந்தத் தன்மையே எங்களது இருப்புக்கு எதிரானமுதலாவது ஆபத்து என நான் கருதுகிறேன்.

கல்முனை எச்.ஏ.அஸீஸ் எழுதிய ஐந்து கண்டங்களின் மண் கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்தஞாயிற்றுக்கிழமை (10) கலாபுசணம் ஏ.பீர்முஹம்மட் தலைமையில், சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்புமண்டபத்தில் பாவலர் பஸீல் காரியப்பர் அரங்கில் இடம்பெற்றபோது ஏற்புரை வழங்கிய வெளிநாட்டுஅமைச்சின் பணிப்பாளர் நாயகமும் ஒஸ்ரியா நாட்டுக்கான முன்னாள் தூதுவரும் சிரேஷ்ட இராஜதந்திரியுமான எச்,ஏ.அஸீஸ் இவ்வாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,

மதங்கள் கடந்த மனிதாபிமானத்தை இப்போது தேட வேண்டியுள்ளது எமது நாட்டில் மலர்ந்துள்ளநல்லாட்சியிலாவது அதனை எப்படியாவது நாங்கள் மீண்டும் நுகர்ந்துகொள்ள வேண்டிய சரித்திர தேவைஇருக்கின்றது .அதற்கான ஒரு சிறிய பங்களிப்பாகவே “ஐந்து கண்டங்களின் மண்” என்ற எனதுகவிதைத்தொகுப்பாக்க பிரசவித்துள்ளது. 

எவ்வளவுதான் நாங்கள் பதவி உயர்வுகளை பெற்றுக்கொண்டாலும் மனிதாபிமானம் எங்களிடமில்லை என்றால் நாங்கள் பெற்ற உயர்வுகளில் எந்த பயனுமில்லை, மனிதாபிமானம்மதம் மற்றும் இனம் கடந்ததாக இருக்கவேண்டும் , நாங்கள் வாழும் இந்தக்கால கட்டம் மிகமுக்கியமானது, சிலசரித்திரத் தவறுகளால் அல்லது அரசியல் கலாச்சார மற்றும் சமூக ரீதியிலான சிலசில பிழைகளால் சிலசங்கடங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. தற்போதைய சூழ்நிலை சமாதானம்நல்லிணக்கம் ஐக்கியம் பற்றியெல்லாம் பேசப்படுவதால் இவ்வாறானதொரு சூழலில் எனது கவிதைத்தொகுப்புவெளிவருவதயிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். மேற் குறிப்பிட்டவைகளில் அடித்தளமாக மனிதாபிமானம்அமையவேண்டும்

நான் இராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபடுபவன் என்ற அடிப்படையில் பலநாடுகளுக்கும் சென்று இலங்கை தொடர்பான நல்லபிப்பிராயத்தை பெறுவதற்கான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வந்தேன்.. ஆனால் இவ்வாறன செயற்பாட்டை உள்நாட்டில், தான் சார்ந்த இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ நல்லபிப்பிராயத்தை பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்க முடியாது அது மனிதாபிமானமும் இல்லை என்று அறிந்து கொண்டேன்.

தற்போதுள்ள இராஜதந்திர பார்வையையே மாற்றவேண்டிய காலம் மலர்ந்துள்ளது அதாவது பொருளாதாரஇராஜதந்திரம் என்றோ அல்லது ஏனைய இராஜதந்திரங்கள் என்றில்லாது நல்லிணக்க இராஜதந்திரத்தை கொண்டுவரவேண்டும் . இராஜதந்திரமே நல்லிணக்கமாக மாறுகின்றபோது வாழ்க்கையுடைய மாற்றமும்அங்கே ஆரம்பிக்கும். எந்த நாடும் தன்னைப்பற்றிய ஒரு விம்பத்தை உருவாக்குவது உண்மை . அதாவதுதாங்கள் ஒரு சிறந்த நாடு எங்களது மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் எங்களிடம் பொருளாதார ரீதியிலானவாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. 

எங்களது நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்று சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் அந்த விம்பமும் அதனுடைய யதார்த்தமும் அவ்வளவு தூரம் வித்தியாசப்பட்டிருக்கக்கூடாது. எனேன்றால் யதார்த்தத்தை விட்டு விம்பத்தைப்பெருக்கிக்கொண்டு போகும் போது ஒரு கட்டம் வரும் அது தெளிவற்ற ஒன்றாக மாறிவிடும். ஆகவே விம்பம் யதார்த்தத்துக்கு ஓரளவுக்கு ஒத்துப்போவதாக இருக்கவேண்டுமே தவிர அதை மறுதலிக்கிறதாக போகக்கூடாது. நல்லிணக்க இராஜதந்திரத்தைநிலைநாட்டுவது என்பது சவால் நிறைந்த ஒன்றாகும்.

எனது ஐந்து கண்டங்களின் மண் என்ற கவிதை நூலில் கூட நான் சொல்ல வந்தது எந்த மண்கலவையைபிரித்தறிய முடியாதோ அதேபோன்று மானிடத்தியும் பிரிக்க முடியாது என்பதுதான். மனிதர்கள் எல்லோரும் அரசியல் மிருகங்கள்தான் அப்படி இல்லாதுபோனால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. அதில் உள்ளவித்தியாசம் அரசியல் செய்வதா அல்லது அதனை அவதானிப்பதா? அல்லது எதிர்காலத்தைப்பற்றி யோசிப்பதா? என்று பார்க்கின்ற போது எதிர்காலத்தைப்பற்றி யோசிக்கவேண்டியிருக்கிறது , அதில் கடந்தகால அரசியலையும்நிகழ்கால அரசியலையும் வைத்து எதிர்காலத்தை நலமாய் அமைத்துக்கொள்ள சிறந்த வியூகங்களைஅமைப்பதுதான் எமது இலக்கு.

நல்ல தலைவர் நல்லவற்றை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் , இஸ்லாம் கடினமான மார்க்கம் என்றஅடிப்படையில் முன்வைக்கப்படும் சில கோஷங்களுக்கு எங்களில் சிலரது போக்குகளே காரணம் என்றும்அவர்கள் கூறுவதுபோல் இஸ்லாம் அவ்வளவு கடினமான மார்க்கம் இல்லை என்றும் அது அன்பை போதிக்கும் ஒரு மார்க்கமாகும்.

அரசியலில் எனக்கு ஒரு துளிகூட ஆர்வமில்லை, அதுதொடர்பில் எனது கவிதைத் தொகுப்பில் விடையும் கொடுத்துள்ளேன். என்று தெரிவித்தார்.

கலாபுசணம் ஏ.பீர்முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப்பு அதிதியாக பேராசிரியர் தீன்முஹம்மத் கலந்து கொண்டதுடன் கலாநிதி யு.பாறூக் (உபா) விசேட உரையினையும், தீரன் ஆர்.எம் நௌஸாத்கவி நயத்தலையும், பேராசிரியர் சி.மௌன குரு நூலின் முதற் பிரதியினை நூலாசிரியர் எச்.ஏ.அஸீஸின் தாயார் பல்கீஸ் உம்மாவிற்கு வழங்கி வைத்து நூல் பற்றிய கருத்துரையினையும் , பேராசிரியர் ரமீஸ்அப்துல்லாஹ் நூல் ஆய்வினையும், வைத்திய கலாநிதி புஸ்பலதா லோகநாதன் கருத்துரையினையும் பேராசிரியர் தீன் முஹம்மத் சிறப்புரையினையும் நூலாசிரியர் எச்.ஏ.அஸீஸ் ஏற்புரையினையும் வழங்கினார்கள்.

இக் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பன்னூலாசிரியர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்ட வல்லுனர்கள் ,கல்வியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் ,நூலாசிரியரின் குடும்பத்தினர், பாடசாலை நண்பர்கள், பெண்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -