தேசத் துரோகிகளுக்கு துருக்கி மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர் -அமைச்சர் ஹக்கீம்

யுதப் புரட்சியில் ஈடுபட்ட தேசத் துரோகிகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுமாறு துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டகன் நாட்டு மக்களுக்கு விடுத்த பகிரங்க அழைப்பை மனப்பூர்வமாக ஏற்று, உடனடியாகச் செயற்பட்டு, அதனை தோற்கடித்த மக்களை இந்த 21ஆம் நூற்றாண்டில் சட்டத்தின் ஆட்சியை விரும்பும், ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் உலகளாவிய ரீதியில் பரவலாகப் பாராட்டுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

துருக்கியில், ஜனநாயக விரோத இராணுவப் புரட்சி தோற்கடிக்கப்பட்டதையிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர தட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் ஹக்கீமின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தவறாக வழிநடத்தப்பட்ட, கைவிட்டு எண்ணக் கூடிய சில தீய சக்திகளால் துருக்கியில் ஆட்சி கவிழ்ப்புக்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியை அந்நாட்டின் தேசப்பற்றுள்ள மக்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக முறியடித்திருப்பதையிட்டு, இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அந்த மக்களை நான் பாராட்டுகின்றேன்.

மிகவும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாட்டின் சுயாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதப் புரட்சியில் ஈடுபட்ட தேசத் துரோகிகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடுமாறு துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டகன் நாட்டு மக்களுக்கு விடுத்த பகிரங்க அழைப்பை மனப்பூர்வமாக ஏற்று, உடனடியாகச் செயற்பட்டு அதனை தோற்கடித்த மக்களை இந்த 21ஆம் நூற்றாண்டில் சட்டத்தின் ஆட்சியை விரும்பும், ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் உலகளாவிய ரீதியில் பரவலாகப் பாராட்டுகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் கூட, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கு ஆதரவாக எழுந்த மக்கள் பேரலையை புறந்தள்ள சில விஷமிகள் முயற்சித்துவரும் போதிலும் கூட, அவர்களுக்கு மக்கள் ஆதரவு அறவே இல்லை என்ற உண்மை, துருக்கிய மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் இந்த வேளையில் எங்கள் நினைவுக்கு வருகின்றது.

துருக்கியில் நடந்த துக்ககரமான சம்பவத்தில் நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக தங்கள் இன்னுயிர்களை நீத்த 161 அப்பாவி மக்களுக்கு தியாகிகளின் அந்தஸ்து கிட்டவேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -