எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் முன்வைத்த விடயங்கள்..!

M.T. ஹைதர் அலி-
ல்லை நிர்ணய ஆணைக்குழுவினுடைய தலைவர் அதன் அங்கத்தவர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சினுடைய பிரதிநிதிகள் உட்பட பல உயர் அதிகாரிகள் 24.07.2016ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்திருந்தனர். இதன்போது 21.08.2015ஆந்திகதியன்று வெளியான இலக்கம் 1928/28 வர்த்தமானி பிரகாரம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளிலுள்ள பிரச்சனைகள் சம்மந்தமாக ஆராயப்பட்டது.

இதன்போது காத்தான்குடி வட்டார பிரிப்புக்கு முன்பாக அதனுடைய எல்லைகள் சரியாக பிரிக்கப்பட வேண்டுமென்றும் காத்தான்குடியினுடைய எல்லைகள் தொடர்பாக 1987.05.12 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 453/18, 1997.07.04 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 58/1092 மற்றும் 1998.12.11 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 1057/16 ஆகியவற்றின் பிரகாரம் அமையப்பெற வேண்டிய எல்லைகளையும் அதன் பரப்பிணையும் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் வந்திருந்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவினருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெளிவுபடுத்தியதுடன் அதற்கான சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அத்தோடு, காத்தான்குடியினுடைய சனத்தொகைக்கு ஏற்ப காத்தான்குடியினுடைய வட்டாரப் பிரிப்பு 2015.08.21 அன்று வெளியான இலக்கம் 1928/28 வர்த்தமானி பிரகாரம் எல்லை வரையருக்கப்பட்டிருப்பது போதாது என்றும் அதனை 18 வட்டாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்ற நியாயங்களை முன்வைத்ததுடன் ஏற்கனவே உள்ளூராட்சி மாகாண சபைகளினுடைய செயலாளருக்கு 2015.11.18 திகதியன்று அனுப்பிவைக்கப்பட்ட முன்மொழிவினுடைய பிரதி ஒன்றினை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினரிடம் கையளித்து அதற்கான சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறும்.

மேலும், மண்முனை வடக்கு மஞ்சந்தொடுவாய் வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டாரமாக மாற்றப்பட (ஆக்கப்பட) வேண்டும் என்றும் இல்லாவிடின் அங்கிருக்கின்ற மட்டக்களப்பு மாநகர சபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்படுகின்ற ஓர் துர்பாக்கிய நிலை ஏற்படும் என்பதனை தெளிவுபடுத்தியதுடன், புளியந்தீவு வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டாரமாக 2015.08.21 திகதியன்று வெளியான வர்த்தமானியின் பிரகாரம் ஆக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்பதை தெளிவுபடுத்தி மஞ்சந்தொடுவாய் வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டார தொகுதியாக மாற்றி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி தருமாறும்.

மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டாரத்திற்கு முஸ்லிம்களினுடைய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுகின்ற விதத்தில் அதனுடைய வட்டார எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இவ் ஆணைக்குழுவினரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வேண்டிக் கொண்டார்.

இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அமீர் அலி, மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம், மட்டு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -