முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டினில் வீட்டுக்கு வீடு மரம் நடும் நிகழ்வுகள் நாடு பூராகவும் நாளை ஆரம்பம்..!

ஏ.எல்.டீன்பைரூஸ்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் வேளைத்திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுப்பதற்கான செயல்திட்டமாக வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டத்தின் பிரதான வைபவம் (01.08.2016 திங்கற்கிழமை) காலை 09.00 மணிக்கு கந்தளாயில் ஆரம்பபித்து வைக்கப்படவுள்ளது. நிகழ்வின் பிரதம அதிதியாக அமைச்சர் றவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார்.

கந்தளாய் பிரதான வைபவத்தினை தொடர்ந்து நாடு பூராகவும் இச்செயல் திட்டம் அமுல் படுத்தப்படல் வேண்டும் என்ற கட்சியின் தீர்மாணத்திற்கு அமைய காத்தான்குடிக்கான நிகழ்வு (01.08.2016 திங்கற்கிழமை) காலை 09.00 மணிக்கு காத்தான்கடி கடற்கரை வீதியில் (தள வைதியசாலை முன்பாக) அமைந்துள்ள வைத்தியர் அப்துர்றஹ்மான் காடனில்(சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் காத்தான்குடி பிரதான காரியாலயத்தில்) கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், நீர் வழங்கல் நகர திட்டமிடல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.என்.எம்.முபீன் தலைமையில் நடை பெறவுள்ளதாக மத்திய குழு தெரிவிப்பு.

வீட்டுக்கு வீடு நடப்படுகின்ற மரங்களை இளைஞர் காங்கிரஸ் மத்திய குழுவினர் பராமரிப்பதுடன் அவ்வீடாருடைய முழுமையான தகவல்களை திரட்டி அவர்களுடனான உறவுகளை தொடர்ந்து பேணி எதிர்காலங்களில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க கூடியதாக இருக்கும் என இது தொடர்பாக இடம் பெற்ற கலந்துரையாடலின் போது யூ.எல்.என்.எம்.முபீன் தெரித்தார்.

எனவே (01.08.2016 திங்கற்கிழமை) காலை 09.00 மணிக்கு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் காத்தான்குடி பிரதான காரியாலயத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு கட்சியின் போராளிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் காத்தான்குடி மத்திய குழு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -