மகிந்த கைது செய்யப்படுவார்..?

கிந்த ராஜபக்ஸ தனது காலத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொலைகளை செய்து நாட்டை ஆட்சி செய்ததாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த காலத்தில் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது தமது கோரிக்கையை முன்வைத்த அன்டனி பெர்னாண்டோ என்ற மீனவர் கொல்லப்பட்டார். அத்துடன் ரத்துபஸ்வலவில் குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஸ இரண்டு ஆண்டுகளை இழந்தார். பாத யாத்திரையில் கண்டியில் இருந்து கொழும்புக்கு வரும் போது மேலும் இரண்டை இழப்பார்.

பாத யாத்திரையில் வருவோர் தொகுதி அமைப்பாளர் பதவிகளையும் கட்சியின் அங்கத்துவத்தையும் இழப்பார்கள்.

மேலும் பாத யாத்திரையின் போது அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடத்திய குழுவுடன் இணைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது சட்டவிரோதமாக மக்களை கூட செய்வது. இதில் மகிந்த ராஜபக்ஸவும் அடங்குகின்றார்.

சட்டவிரோதமாக கூட்டம் நேர்ந்த சம்பவம் தொடர்பில் இலங்கையின் தலைவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. முதல் தலைவராக மகிந்த ராஜபக்ஸ இதில் சிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 1994 ஆம் ஆண்டு புரட்சியை ஏற்படுத்தினர். திருடர்களே தற்போது புரட்சி செய்ய பார்க்கின்றனர் எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -