கொன்றொழிக்கப்படும் காஸ்மீர் மக்களுக்காக -ஷிப்லி பாரூக்.

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் திட்ட மிட்ட வழி காட்டலுடன்
தீவிரவாதத்தினை ஒழிக்கின்றோம் என்ற போர்வையில் காஸ்மீர்
மானிலத்திலே இந்திய இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டு
அப்பாவி காஸ்மீர் முஸ்லிம்களை கொன்றொழிக்கும் வன்முறைக்கு எதிராக
இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியவாதிகளும், தலைமைகளும் குரல்
கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபை
உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக்.
தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவித்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக்…
அண்மைக்காலமாக இந்தியாவிலே முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாத
செயற்பாடு ஆளும் பாரதீக ஜனதா கட்சியினால் மிக மோசமாக
முடிக்கிவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இந்துத்துவ தீவிரவாதிகள்
மேற்கொள்கின்ற முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாத செயற்பாட்டிற்கு
இந்திய பிரதமர் நரேந்திய மோடி எந்த விதமான தடைகளையோ அல்லது
அதற்கு எதிரான நடவடிக்கைகளையோ எடுக்காமல் அதனை ஊக்குவிக்கின்ற
முறையில் அவருடைய ஆட்சி நடை பெற்றுக்கொண்டிருப்பதனை
காணக்கூடியதாக இருக்கின்றது.
உலகிலே ஜனநாயகத்தினை மேலோங்கச் செய்கின்ற நாடு என தன்னை மார்
தட்டிக்கொள்ளும் இந்தியாவில் ஜனநாயக ரீதியாக தங்களுடைய
உரிமைளுக்காக போராடுகின்ற காஸ்மீர் முஸ்லிம் பெண்களை மிக
மோசமான முறையில் பாலியல் வல்லுரவுகளுக்கு உட்படுத்தி அவர்களை
கொன்றொழிக்கின்ற விடயங்களை பார்க்கின்ற பொழுது ஜனநாயகத்தினை
பற்றி பேசுவதற்கு இந்தியாவிற்கு எந்த அருகதையும் இல்லை என்பதனையே
உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுகாட்டுவதாக அமைகின்றது.
சில மாதங்களாக இந்தியாவிலிருந்து மாட்டு இறைச்சியினை சாப்பிடுகின்ற
முஸ்லிம்கள் என்ற போர்வையின் கீழ் தங்களுடைய கடவுளை முஸ்லிம்கள்
அறுத்து புசிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அப்பாவி
முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரவாதத்தினை முடிக்கி விட்டுள்ளார்கள்.
ஆனால் மறுபக்கத்திலே உண்மையாக பார்க்கின்ற பொழுது உலகிற்கு
இந்தியாவில் இருந்துதான் மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
அதில் முக்கிய விடயம் என்னவென்றால் அதிகப்படியாக மாட்டு
இறைச்சியினை உலகிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும்
இந்தியாவில்தான் இருக்கின்றன. உலகிற்கு ஹலால் இறைச்சி ஏற்றுமதி
செய்கின்றோம் என்பதனை காட்டுவதற்கக முஸ்லிம் பெயர்களிலே
நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அணைத்து
நிறுவனங்களினதும் உரிமையாளர்கள் இந்துக்களாகவே இருக்கின்றார்கள்.
உதாரணத்திற்காக (Al-Kabeer Exports Pvt. Ltd. Its owner Name: Mr. Shatish &Mr. Atul Sabharwal Address:
92, Jolly makers, Chembur Mumbai 400021 2/ Arabian Exports Pvt.Ltd. Owner’s Name: Mr.Sunil Kapoor Address:
Russian Mansions, Overseas, Mumbai 400001 3/ M.K.R Frozen Food Exports Pvt. Ltd.) இவைகளை
குறிப்பிடலாம்.
இவற்றை கடந்த காலங்களில் பிரபல நடிகரும், இயக்குனர் மற்றும் இந்திய
உலக தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து
போராடிக்கொண்டிருக்கின்ற அரசியல்வாதியான சீமான் பகிரங்கமாக
சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கின்ற
பொழுது,.. வேண்டும் என்றே திட்டமிடப்பட்டு இருபது கோடிகளுக்கு மேல்
சனத்தொகையினை கொண்டு வாழுகின்ற முஸ்லிம்களை இந்தியாவில்
இருந்து இல்லாமல் செய்கின்ற நரேந்திர மோடியின் நடவடிகையாகவே
இருக்கின்றது என்பதே உண்மையாகும்.
ஆகவே உலகில் வாழுகின்ற எல்லா முஸ்லிம்களும், அரசியல்,சமூக
தலைமைகளும், இதற்கு எதிராக குரல் கொடுக்கின்ற விடயத்தினை முக்கிய
செயற்பாடக எடுத்து கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அதே போன்று
குறிப்பாக சகோதர நாடாக இருக்கின்ற இலங்கையில் வாழுகின்ற
முஸ்லிம்களினுடைய தலைமைத்துவங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
,முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரும் பாராளுமன்றத்திலே இது சம்பந்தமான
விடயங்களை கொண்டு சென்று இந்தியாவினுடைய அடாவடி தனத்திற்கு
எதிரான எதிர்ப்பினை அல்லது கண்டன பிரேரணையினை நிறைவேற்ற
வேண்டும் என இவ்விடத்தில் மக்கள் பிரதி நிதி என்ற வகையிலே
கேட்டுக்கொள்ள விரும்புக்கின்றேன்.
ஏன் என்றால் நாங்கள் கலீமாவினை கூறியதன் வகையிலே முஸ்லிம்கள்
எங்கு வாழ்ந்தாலும் எங்களுடைய உறவு சகோதரத்துவத்தினை
அடிப்படையாக கொண்டது என்பதனை மனதில் வைத்து செயற்பட வேண்டிய
சமூகமாக இருக்கின்றோம். ஆகவே எமது சகோதரர்களின் இரத்தங்கள்
ஓட்டப்படுகின்ற பொழுதும், அவர்கள் வீனாக கொல்லப்படுகின்ற பொழுதும்
அவர்களுடைய உரிமைகளுக்காக குரல்கொடுக்கின்ற தேவைப்பாடு எமக்கு
இருக்கின்றது.
அந்த வகையிலே பார்க்கின்ற பொழுது அண்மைகாலமாக கஸ்மீரிலே
நேரடியாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு முஸ்லிம் பெண்களை பாலியல்
வல்லுரவிற்கு உட்படுத்துவது, வயது வித்தியாசமின்றி முதியோர்கள்
சிறுபிள்ளைகள் என கொன்றொழிப்பது, மிருகங்களை அடிப்பது போன்று
பெண்களை அடித்து வீதியில் இழுத்து செல்வது போன்ற விடயங்கள் மிக
மோசமான முறையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. எல்லா
ஊடகங்களிலும் இவைகள் தெளிவாக வெளிக்காட்டப்பட்டும் கூட
எல்லோரும் மெளனிகளாக பார்த்து கொண்டிருக்கின்ற இவ்விடயத்தினை
வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்தியாவினுடைய இராணுவத்தினருக்கு எதிராகவும் மோடியின்
அரசாங்கத்திற்கு எதிராகவும் நாங்கள் குரல் கொடுக்க வேண்டிய
தேவைப்பாடு மிகவும் தெளிவாக இருக்கின்றது. இலங்கையில் இராணுவம்
மிகவும் மோசமாக இறுதி யுத்தத்தில் நடந்து கொண்டது என குற்றம்
சுமர்த்தப்பட்டு இலங்கையினுடைய இரணுவத்திற்கு எதிராக விசாரனைகள்
நடாத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் குரல் கொடுக்கின்ற நேரத்தில்
இன்னொரு சமூகமானது முஸ்லிம்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக
காஸ்மீரிலே இந்தியா இராணுவத்தின் திட்டமிடப்பட்ட வன்முறைகளால்
இலட்ச்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றார்கள்.
ஆனால் அதனை சர்வதேசமும், முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம் அரசியல்
தலைமைகளும், மெளனமாக பார்த்துக்கொண்டிப்பது என்கின்ற விடயத்தினை
எங்களால் ஏற்றுகொள்ள் முடியாதுள்ளதுடன் மிகவும் மனவேதனை அளிக்க
கூடிய விடயமாகவும் இருக்கின்றது. ஆகவே இந்திய அரசாங்கத்திற்கு
எங்களுடைய வன்மையான கண்டனத்தினை தெரிவிக்கும் அதே நேரத்தில்
இதற்கு எதிராக சர்வதேசம் தலையிட்டு காஸ்மீர் மக்களுக்கு விடிவினை
பெற்றுக்கொடுக்க வேண்டும்.
காஸ்மீர் எனும் போராட்டமனது அவர்களுடைய உரிமைக்காக போராடுகின்ற
ஒரு போராட்டமாகும். அந்த உரிமையினை காஸ்மீர் மக்களுக்கு
கொடுக்காமல் ஜனநாயக ரீதியில் போராடுகின்ற மக்களையும் கொன்று
அழித்தொழிக்கின்ற இந்திய அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும்
செயற்பாட்டிற்கு நாம் முற்று புள்ளி வைக்கும் முகமாக நாம் எல்லோரும்
ஒன்று பட்டு இறைவனிடத்தில் துவா பிரார்த்தனை செய்ய வேண்டும் என
கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு நரேந்திர மோடியின் பாரதீக ஜனதா
கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பதன் மூலம் காஸ்மீர்
மக்களினுடைய பிரச்சனையினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
ஆகவே அதற்கு நாம் ஒன்று பட்டு செயற்பாட வேண்டிய கட்டாய தேவை
எமக்கிருக்கின்றது என என்பதனை மிக முக்கியமாக இங்கு
ஞாபகபடுத்திகொள்ள விரும்புக்கின்றேன்.
பொறியியலாளர் ஷிப்லி பாக்கின் காஸ்மீர் மக்களின் உரிமைகள் மற்றும்
அவர்களுக்கு எதிராக இடம் பெறுகின்ற வன்முறைகளை சம்பந்தமாக
தெரிவித்த நேரடி கருத்துக்களின் ஆடியோ காணொளியானது எமது
வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ பார்வைக்கு கிளிக் செய்யவும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -