ப.நோ.கூ.சங்கத்தின் புதிய தலைவராக சாய்ந்தமருது உதுமாலெவ்வை தெரிவு...!
யூ. கே. காலித்தீன்

ரசியல் தலையீடுகளும், நெருக்கடிகளும், சவால்களும், நீதிமன்ற வழக்குகளும் கழுத்தறுப்புகளும் ஆள்மாறாட்டங்களும் மிகவும் உக்கிரமாக செயற்பட்டு மேற்படி நிகழ்வினை நேற்றுவரை தடைசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அத்தனை தடைகளையும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் வழிகாட்டலில் மிகவும் நிதானமாக வெற்றிப்படிக்கற்கலாக மாற்றி அனைத்தையும் வெற்றிகொண்டு இன்று 16.07.2016 சனிக்கிழமை சாய்ந்தமருது ப.நோ.கூ சங்கத்திற்கான புதிய நிருவாக சபை தொிவு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோத்தரும் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.ஏ.பரீட் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது சாய்ந்தமருது ப.நோ.கூ சங்கத்தின் புதிய நிருவாகத் தொிவு இன்று மிகவும் சிறப்பாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று தொிவு செய்யப்பட்டுள்ள சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஜனாப். எம்.எம் உதுமாலெவ்வை கருத்து தெரிவிக்கையில் எனது தலைமையிலான புதிய நிருவாக சபையினர் தங்களது செயற்பாடுகளை சுயநலமற்ற சாய்ந்தமருது ப.நோ.கூ. சங்கம் இலாபம் ஈட்டக்கூடிய வகையிலான சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாபுமாகும்.

கட்சி பாகுபாடுகள், குரோதங்கள், பழிவாங்கல்கள், கழுத்தறுப்புகள் போன்றவற்றை முழுமையாக களைந்து வருகின்ற காலங்களில் இப்புதிய நிருவாகத்தின் செயற்பாடுகளையே தொடர்ச்சியாக வருகின்ற புதிய இளம் தலைமுறையினரும் ஏற்றுக்கெள்ளும் வகையிலான சிறந்த திட்டங்களை மக்கள் நலனிலும் இந்த சாய்ந்தமருது மக்கள் விரும்பும் வகையிலும் செயற்படுத்தி வெற்றிபெறுகின்ற வழிவகைகளை சாியாக திட்டமிட்டு செயற்படவேண்டும் எனவும் புதிய தலைவர் உதுமாலெவ்வை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -